அசத்தலான பன்னீர் சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?

அசத்தலான பன்னீர் சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?

0

விதவிதமான காலை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த பன்னீர் சாண்ட்விச் ட்ரை பண்ணி பார்க்கலாம். 

அசத்தலான பன்னீர் சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?
எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு பிரட்டும், பன்னீரும் வைத்து இப்படி சாண்ட்விச் செய்து கொடுத்தால் காலை உணவு அருமையானதாக மாறும். 

சுவையான பிரட் பன்னீர் சாண்ட்விச் ரெசிபி எப்படி செய்வது? என்பதை தொடர்ந்த இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

ஆரோக்கியம் தரும் வெள்ளை அரிசி !

தேவையான பொருட்கள்: 

பிரட் துண்டுகள் – நான்கு, 

சீஸ் துருவல் – ஆப்ஷனல், 

டொமேட்டோ சாஸ் – ரெண்டு ஸ்பூன், 

குடைமிளகாய் – பாதி அளவு, 

மேகி மசாலா – ரெண்டு ஸ்பூன், 

சில்லி ஃபிளேக்ஸ் – ஒரு ஸ்பூன், 

சில்லி சாஸ் – இரண்டு ஸ்பூன், 

புதினா சட்னி – ரெண்டு ஸ்பூன், 

மிளகாய் தூள் – அரை ஸ்பூன், 

ஏன் கோடை காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்?

மிளகு தூள் – அரை ஸ்பூன், 

வெண்ணெய் – ரெண்டு ஸ்பூன், 

பன்னீர் – தேவையான அளவு, 

வெங்காயம் – பாதி அளவு, 

தக்காளி – ஒன்று, 

நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

செய்முறை : 

அசத்தலான பன்னீர் சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?

பிரட் சாண்ட்விச் செய்வதற்கு முதலில் நான்கு பிரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சாண்ட்விச் செய்வதற்கு இரண்டு பிரட் துண்டுகள் தேவை. 

எந்த வயதில் பிரா அணிய வேண்டும் !

ஒரு பிரட் துண்டை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது முதலில் சிறிதளவு வெண்ணையை தடவிக் கொள்ளுங்கள். 

பின்னர் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ், ஆகியவற்றையும் ஒன்றன் மீது ஒன்றாக தடவுங்கள். 

பின்னர் அதன் மீது பன்னீர் துண்டுகளை வைத்து இடையிடையே வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் போன்றவற்றால் அலங்கரியுங்கள். பின்னர் அதன் மீது சீஸ் துருவலை துருவி கொள்ளுங்கள். 

சீஸ் இல்லை என்றால் பரவாயில்லை அதை விட்டு விடலாம், ஆப்ஷனல் தான். அதற்கு பதிலாக சிறிதளவு வெண்ணெயை உருக்கி சாரல் போல தூவிக் கொள்ளுங்கள். 

பின்னர் அதன் மீது சில்லி ஃப்ளேக்ஸ், மிளகாய் தூள், மேகி மசாலா, மிளகுத்தூள், நறுக்கிய மல்லி தழை ஆகியவற்றை தூவி கொள்ள வேண்டும்.

பின்னர் அதன் மீது இன்னொரு பிரெட் துண்டை வைத்து நன்கு அழுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு தோசை கல்லை வைத்துக் கொள்ளுங்கள். 

காது குத்துவது கண்களுக்கு பாதுகாப்பா? 

அதில் சுற்றிலும் வெண்ணெய் விட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக சிவக்க மெதுவாக திருப்பி போட்டு வறுத்து எடுக்க வேண்டும். 

மைக்ரோவேவ் ஓவன் வைத்திருப்பவர்கள் ஓவனில் வைத்து எடுக்கலாம். இது இன்னும் சூப்பராக இருக்கும். ஓவன் இல்லாதவர்கள் இது போல தோசை கல்லிலேயே மெதுவாக சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். 

அதன் பிறகு இரண்டு பாகமாக வெட்டி சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். எல்லோருமே வீட்டில் இனி அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். 

இதை காலையில் செய்து கொடுக்கும் பொழுது அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். அப்படி முடியாதவர்கள் மாலை ஸ்நாக்ஸ் போல குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம், 

ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இது போல சுவையான பன்னீர் சாண்ட்விச் ரெசிபி உடனே செய்து கொடுத்து அசத்துங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)