Recent

featured/random

நோயின்றி வாழ வேண்டுமா? பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள் !

0

இன்றைய காலத்தில் மக்கள் நேரத்தினை கருத்தில் கொண்டு பிரஷர் குக்கரில் சமைத்து தனது வேலைகளை மிகவும் சுலபமாக செய்து முடித்துவிடுகின்றனர்.

நோயின்றி வாழ வேண்டுமா? பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள் !
அவ்வாறு பிரஷர் குக்கரில் சமைப்பதாலும், மாறாக ஸ்டீல் அல்லது மண் பாத்திரத்தில் மெதுவாக சாதம் வைப்பதால் என்ன நன்மைகள், தீமைகள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

திறந்த பாத்திரத்தில் மெதுவாக சமைக்கும் பலன்கள்:

எளிதாக ஜீரணம் ஆகிறது. அதிகப்படியான மாவுச்சத்தை கஞ்சி தண்ணீராக நீக்குகிறது மற்றும் சர்க்கரை அளவு ஏற்றுவதை குறைக்கிறது. 

சுவையான கிரீன் ரெட் சாண்ட்விச் செய்வது எப்படி?

இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்க வைக்கிறது.

அதிக நேரம் இருந்தால், மண் பானைகளில் அல்லது திறந்த பாத்திரத்தில் அரிசி சமைக்கும் பாரம்பரிய நுட்பத்தை பின்பற்றுவது நல்லது. ஏனெனில் அவை ஆரோக்கியமானவை.

கஞ்சி தண்ணீரின் பயன்கள்:

தலைமுடிக்கு பயன்படுத்தலாம். பசுக்களுக்கு கஞ்சி தண்ணீரை கொடுக்கலாம். துணி விறைப்பானாக (Starch Stiffeners) பயன்படுத்தலாம்.

அதிகப்படியான தண்ணீரில் ஒரு பகுதியை வெந்தய விதைகளோடு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்தால் அடுத்த நாள் சிறந்த புரோபயாடிக் பானமாக செயல்படுகிறது. 

வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.

பெரியவர்கள் காலை நேர டீ காபிக்கு பதிலாக இந்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவல், சிறிது உப்பு சேர்த்து குடித்தால் சிறந்த ஆற்றலைப் பெறலாம்.

உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

நீண்ட நாட்களுக்கு நோயின்றி வாழ வேண்டுமா? பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்.

பிரஷர் குக்கரில் தினமும் சாதம் செய்வதால் உள்ள குறைபாடுகள்:

நோயின்றி வாழ வேண்டுமா? பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள் !

மாவுச்சத்து(கஞ்சி தண்ணீர்) வடிகட்டப்படுவ தில்லை. உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம். உட்பொருட்கள் சீராக சமைக்கப்படாமல் இருக்கலாம். 

இதனால் உணவு செரிமானத்திற்கு இடையூறு விளைவிக்கலாம். பிரஷர் குக்கர் பிஸியான வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு ஏற்றது. 

உயிருக்கு உலை வைக்கும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு ! 

ஸ்டார்ச் அதிகம் அல்லாதவற்றை வேக வைக்க அவ்வப்போது பயன்படுத்துவதற்கும் ஏற்றது.  

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !