நீங்கள் பயன்படுத்தும் நெய் தூய்மையானதா? எளிய முறையில் கண்டறிய !

0

பழங்காலம் தொட்டு இன்று வரை இந்திய உணவுகளில் முக்கியமானதாக உள்ளது நெய். 

நீங்கள் பயன்படுத்தும் நெய் தூய்மையானதா? எளிய முறையில் கண்டறிய !
நீங்கள் சாப்பிடக்கூடிய எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு கூடுதல் சுவை அளிக்கும். 

இதோடு உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். 

வெண்ணெய்யை விட உருக்கிய சுத்தமான பசு நெய் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிமானிக்கும் திறன் உள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ளது. 

காலையில் சாப்பிடும் உணவில் சிறிதளவு நெய் ஊற்றி சாப்பிடும் போது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கிறது. 

கேன் வாட்டர் உண்டாக்கும் பாதிப்புகள்... எச்சரிக்கை !

நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கிறது. 

உடலில் உள்ள தேவையற்ற சத்துக்களை வெளியேற்றவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது. அதே நேரத்தில் நெய்யின் தூய்மையைக் கண்டறிய பல சோதனைகள் உள்ளன. 

அவற்றில் சில சோதனைகளைப் பட்டியலிடுகிறோம். இதைப் பின்பற்றி உங்கள் நெய்யின் தூய்மையைக் கண்டறிந்து கொள்ளுங்கள்.

உள்ளங்கை சோதனை (Palm)

நீங்கள் பயன்படுத்தும் நெய் தூய்மையானதா? எளிய முறையில் கண்டறிய !

உங்கள் உள்ளங்கையில் ஒரு டீஸ்பூன் நெய் விடவும். அது தானே உருகினால் தூய்மையானது. அப்படி உருகாவிட்டால் கலப்படம்தான்.

அயோடின் சோதனை (Iodine)

ஒரு சிறிய அளவு உருகிய நெய்யில், இரண்டு சொட்டு அயோடின் (உப்பு) கரைசலை சேர்க்கவும். 

அயோடின், ஊதா நிறமாக மாறினால், அதில் ஸ்டார்ச் கலந்திருக்கிறது என்பது உண்மை. எனவே அந்த நெய் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் நிறைந்த இறால் !

வெப்ப சோதனை (Heating)

ஒரு பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்க வேண்டும். நெய் உடனடியாக உருகி, அடர் பழுப்பு நிறமாக மாறினால், அது தூய்மையானது. 

ஆனால், உருகுவதற்கு நேரம் எடுத்து, வெளிர் மஞ்சள் நிறமாக மாறினால், அதில் கலப்படம் செய்யப் பட்டிருப்பது உறுதியாகிறது. எனவே அதைத் தவிர்ப்பதே நல்லது.

பாட்டில் சோதனை (Bottle)

நீங்கள் பயன்படுத்தும் நெய் தூய்மையானதா? எளிய முறையில் கண்டறிய !

ஒரு பாட்டிலில் ஒரு டீஸ்பூன் உருகிய நெய்யை எடுத்து, அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். பாட்டிலை மூடி வேகமாக குலுக்கவும். 

பிறகு ஐந்து நிமிடங்களுக்கு விடவும். இப்போது பாட்டிலின் அடியில் சிவப்பு நிறம் இருந்தால், அதில் சமையல் எண்ணெய் கலப்படம் செய்யப் பட்டிருக்கிறது.

டபுள் பாய்லர் சோதனை (Double Boiler)

நெய்யில் தேங்காய் எண்ணெய் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, டபுள் பாய்லர் முறையைப் பயன்படுத்தி, ஒரு கண்ணாடி ஜாடியில் நெய்யை உருக்கவும். 

7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைக்க எளிய வழி !

சிறிது நேரம் கண்ணாடி ஜாரை ஃபிரிட்ஜில் வைக்கவும். நெய்யும், தேங்காய் எண்ணெய்யும் தனித்தனி லேயராக இருந்தால் அதில் கலப்படம் இருப்பது உறுதி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)