பிள்ளையை பெத்தால் கண்ணீரு தென்னையை பெத்தால் இளநீரு என்ற பழமொழிக்கு ஏற்ப தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
கொலஸ்டிராலாக மாறுமென்றால் தேங்காயை சமைப்பதற்காக சூடுபடுத்தும் போது தான் அது உடலில் கொலஸ்டிராலாக மாறும்.
தேங்காய் நல்ல கொழுப்பாகவே நம் உடலுக்குள் இருக்க தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.
ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் ஆரோக்கியமற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் தேங்காய் ஒரு துண்டு சாப்பிடலாம்.
இந்த பொருட்களை மட்டும் உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க !
ஆனால் நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும்.
அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
அதிலும் தேங்காய் பாலில் என்ன மாதிரியான நன்மைகள் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க...
ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
வளரும் இளமைப் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.
தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.
கொரோனா நேரத்தில் பழம் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்யுங்க !
தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
தேங்காய்ப் பாலில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. மக்னீசியமும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது.
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் குடிப்பீங்களா? இத படிங்க !
செரிமானக் கோளாறுகளைச் சரி செய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.
செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல்,
அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது.
தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும். தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது.
பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா?
எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
தேங்காய்ப்பால் ஆரம்பத்தில் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
எனவே, அமிலத் தன்மையை நீக்க, தொடர்ந்து தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பாலால் பல நன்மைகளை அடையலாம்.