சுவையான ரவை ஓட்ஸ் கீரை அடை செய்வது எப்படி?





சுவையான ரவை ஓட்ஸ் கீரை அடை செய்வது எப்படி?

0

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.கீரையை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது. இதனால் கீரையின் சத்துக்கள் கிடைக்காமல் போய் விடும்.

சுவையான ரவை ஓட்ஸ் கீரை அடை செய்வது எப்படி?

அதிக நார்ச்சத்து நிறைந்தது. வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும். கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. 

கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். தாய்மார்களின் அவசர நண்பன் என ரவையை குறிப்பிடலாம். 

வெறும் 10 நிமிடத்தில் உப்புமா செய்து அசத்தி விடுவார்கள். முதியவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சத்துக்களை அள்ளித்தருகிறது ரவை, இதில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது.

விட்டமின் பி, போலேட் மற்றும் தயமின் உடலுக்கு தேவையான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. ரவை, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, அது ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கச் செய்யும். 

18 ஆண்டுக்கு பிறகு என்னுடைய முதல் லீவ் - பகிர்ந்த மோடி !

ரவை, இதய நலத்துக்கும் உதவக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும். ரவையில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது.

அப்படிப்பட்ட ரவையை தான் நாம் வெறுத்து ஒதுக்குகிறோம், இதில் மிக சூப்பரான ஓட்ஸ் கீரை அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையானவை

ரவை - முக்கால் கப்

கோதுமை மாவு - அரை கப்

ஓட்ஸ் - அரை கப்

பச்சை மிளகாய் - 3 அல்லது 4 (பொடியாக நறுக்கியது)

பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய கீரை - ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

சோம்பு பொடி - ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

இறால் தயிர் பிரியாணி செய்முறை !

செய்முறை

சுவையான ரவை ஓட்ஸ் கீரை அடை செய்வது எப்படி?

ரவையை லேசாக எண்ணெய் விட்டு வறுக்கவும். ஓட்ஸையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

இதனுடன் மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

மாவு அதிக தண்ணீரை இழுத்து கெட்டியாகி விட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்.

மீன் புட்டு செய்முறை !

கல் காய்ந்ததும், மாவை தடியாக ஊற்றி, இருபுறமும் நன்றாக வேக விட்டு எடுத்தால் சத்தான ரவை ஓட்ஸ் கீரை அடை தயார்!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)