அருமையான ஆந்திரா கோழி பிரியாணி செய்வது எப்படி?





அருமையான ஆந்திரா கோழி பிரியாணி செய்வது எப்படி?

0

பிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். 

அருமையான ஆந்திரா கோழி பிரியாணி செய்வது எப்படி?

தமிழ்நாட்டிலே நவாப்கள் ஆட்சிக் காலத்தில் பிரபலமான ஆம்பூர் பிரியாணியைப் போலவே, 

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமாரி வரை விதவிதமாக பல்வேறு பிரியாணி வகைகள் இந்தியாவின் சுவை அரும்புகளை மலரச் செய்துள்ளது. 

கிரானைட் என்றால் என்ன? கிரானைட் தயாராவது எப்படி? 

சரி இனி கோழி கொண்டு ஆந்திரா கோழி பிரியாணி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை:

சிக்கன் - அரை கிலோ  (துண்டுகளாக நறுக்கவும்)

சீரக சம்பா அரிசி - அரை கிலோ

பச்சை மிளகாய் - 8  (நீளவாக்கில் நறுக்கவும்)

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - 2 (சிறிய சதுர துண்டுகளாக நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

புதினா - ஒரு கட்டு (ஆய்ந்து வைக்கவும்)

கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)

பால் - கால் லிட்டர்  (காய்ச்சி ஆற வைக்கவும்)

தயிர் - 100 மில்லி

எண்ணெய் - 50 மில்லி

நெய் - 2 டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

பணம் வந்த வரலாறு தெரியுமா? உங்களுக்கு !

செய்முறை:

அருமையான ஆந்திரா கோழி பிரியாணி செய்வது எப்படி?

அரிசியை அரை மணி நேரம் ஊற விடவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

இதனுடன் சிக்கன், கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், தக்காளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?

இதனுடன் அரிசியைச் சேர்த்து வேக விடவும். அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும். 

கொத்தமல்லித் தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)