பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !





பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

0

பன்னீர் ஒரு ஆரோக்கியமான பால் உணவாகும். தினசரி பனீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமது உடல் ஆரோக்கியமானது மேம்படுகிறது. 

பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

மேலும் இது அருமையான சுவையை கொண்ட ஒரு உணவாக உள்ளது. சாதாரணமாக இந்திய மக்கள் பால் தொடர்பான உணவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள், 

இதனால் இந்தியாவில் பன்னீர் அதிகமாக பயன்படுத்துவதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

கோழி இறகால் சிக்கிய கொலையாளி - இளம்பெண் கொலை !

​பன்னீர்

பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

இறைச்சிகள் மற்றும் பருப்புகளைப் போலவே பன்னீரிலிருந்தும் புரதச்சத்தானது அதிகம் கிடைக்கிறது. 

அதிலும் சாதாரண பாலில் உள்ளதை விட பன்னீரில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. 

அதனால் நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம். 

பன்னீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போ ஹைட்ரைட், 

கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதனை உட்கொள்ளும் போது அதன் முழுப்பலனை பெற முடியும். 

பன்னீர் எல்லா வேலைகளிலும் சாப்பிடக் கூடிய ஓர் உணவுப் பொருள் தான். 

குறிப்பாக, காலை நேரங்களில் பன்னீர் சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி நாளின் தொடக்கத்திலேயே கிடைத்து விடுகிறது. 

இரவு நேரங்களில் சாப்பிடுவதால் நன்கு தூக்கம் வரும். ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் மட்டும் இரவில் பன்னீர் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

ஏனெனில், இதில் கொழுப்புச் சத்து இருப்பதால் செரிமானமாவது சிறிது தாமதமாகும்.

ஆனால் அதிகப்படியாக பனீரை உணவாக சாப்பிடும் போது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. 

பன்னீர் விரும்பிகள் பலருக்கு இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கலாம். 

அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிவதன் மூலம் நாம் பன்னீர் ஏன் உடலுக்கு தீமை பயக்கிறது என்பதை அறிய முடியும்.

ஆந்திராவில் 3 பேர் கழுத்தறுத்து நரபலி - சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம் !

​பனீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

100 கிராம் அளவு பனீரில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் எந்தெந்த விகிதத்தில் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

கால்சியம்: 714 மி.கி

சோடியம்: 18 மி.கி

கலோரிகள்: 265

புரதம்: 19.1 கிராம்

மெக்னீசியம்: 8 மி.கி

கார்போ ஹைட்ரேட்: 14.7 கிராம்

​பயன்கள்

பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

சைவ உணவு உண்பவர்களுக்கு நன்மை பயக்கும் உணவாக பன்னீர் உள்ளது, ஏனெனில் பன்னீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. 

பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது. மேலும், இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. 

இது மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே நன்மை பயக்கிறது.

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறும் போது பன்னீர் உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். 

நீங்க உண்மையிலேயே புத்திசாலியா? இந்த அறிகுறிகள் இருக்கா?

ஏனெனில் அதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

உடல் எடையை குறைக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் எனில் பன்னீர் டிக்கா, துருவிய பன்னீர் என எந்த வடிவிலும் பனீரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எடை அதிகரிப்பை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நாள் முழுவதும் பனீரை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ளலாம். 

ஆனால் அளவாக உட்கொள்ளும் போது மட்டுமே பன்னீர் நமக்கு நன்மைகளை ஏற்படுத்தும்.

​அதிகமாக சாப்பிட்டால்?

பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

பன்னீர் மட்டுமின்றி எந்த ஒரு உணவையும் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். 

அதே போல பனீரை அதிகமாக சாப்பிடும் போது புரதமானது நீண்ட நேரம் வயிற்றில் தங்கியிருப்பதாலும், அதிக புரதத்தை நாம் சாப்பிடுவதாலும் வயிற்றில் பாதிப்பு ஏற்படலாம். 

இதனால் குமட்டல், அடிவயிற்றில் வலி மற்றும் பிடிப்புகள் ஆகியவை ஏற்படும்” என நிபுணர்கள் கூறுகின்றனர்.

​சமைக்காத பன்னீர்

பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

பன்னீர் ஜீரணிக்க எளிதான ஒரு உணவாகும். ஆனாலும் பனீரை சமைக்காமல் உண்பது செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். 

இதனால் அஜீரண பிரச்சனைகள் ஏற்படலாம். சமைக்காத பன்னீர் ஜீரணிக்க கடினமானது என ஆயுர்வேதம் கூறுகிறது. 

மேலும் இது முழுமையாக செரிக்க அதிக நேரம் எடுக்கும். மறுப்புறம் மஞ்சள், இஞ்சி, ஏலக்காய் போன்ற 

மசாலா பொருட்களுடன் பனீரை சமைக்கும் போது அது எளிதில் ஜீரணமாகும். எனவே பனீரை சமைத்து உண்பதற்கு மறக்க வேண்டாம்.

எனவே சமைக்காத பன்னீர் மற்றும் அதிக பன்னீர் உண்பது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. 

பனீரில் பல்வேறு வகையான உணவுகளை செய்யலாம். எனவே எளிதாக உங்களுக்கு பிடித்த வகையில் அதை சமைத்து உண்ணவும். 

முடிந்த அளவு பிரித்து வைத்து ஒவ்வொரு வேளைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பனீரை எடுத்துக் கொள்ளவும். 

இதன் மூலம் உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க !

பன்னீர் பூ

பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன் பாட்டை சரி செய்கிறது. 

இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப் -2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. 

இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செய்லபடுகிறது.

பன்னீர் தயார் செய்வது

பன்னீர் அதிகமா சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? அளவா சாப்பிடுங்க !

பெரும்பாலும் கடைகளில் பன்னீர் வாங்குவதை விட வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. 

இதன் மூலம் பன்னீரில் கலக்கப்படும் ரசாயன அமிலங்களின் கலப்பை நம் உணவில் இருந்து  தவிர்க்கலாம். செலவும் மிக குறைவு.

சந்தோஷமாக குளிக்க சென்றவர் டிக் டாக் வீடியோவால் பரிதாபமாக உயிரிழந்தார் !

குறிப்பு :

பன்னீரை அதிகமாக வறுப்பதோ அல்லது பொறிப்பதோ கூடாது. அவ்வாறு செய்வதால் அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீங்கி விடும். 

இதனால் நம் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காமல் போகலாம். முட்டை பொரியல், கிரேவி போன்றவை செய்து சாப்பிடலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)