தயிர் பல விதமான சத்துக்களை கொண்டது. கால்சியம், புரோட்டீன், வைட்டமின் என பல்வேறு சத்துக்களைக் கொண்டது தயிர். பாலை விட தயிர் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்.

ஆரோக்கியம் தரும் சுவையான தயிர் சட்னி செய்வது எப்படி?
உடல் மெலிந்தவர்கள், எடையை அதிகரிக்க விரும்பினால், தினசரி ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை மற்றும் உலர் பழங்களை கலந்து சாப்பிடவேண்டும். 

ரமலான் நோன்பு கஞ்சி செய்யும் முறை !

இது எடையை அதிகரிப்பதுடன், சோர்வு மற்றும் பலவீனத்தை சமாளிக்க உதவும். தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். 

உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். 

சரி இனி தயிர் கொண்டு சுவையான தயிர் சட்னி செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

தயிர் - கால் லிட்டர்

எண்ணெய் - 4 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 2

வரமிளகாய் - 4

பூண்டு - 20 பல்

உப்பு  - தேவையான அளவு

வரமிளகாய் தூள் - 4 ஸ்பூன்

கரம் மசாலா - 2 ஸ்பூன்

தனியா தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

தேங்காய் பால் சாதம் செய்யும் முறை !

செய்முறை

ஆரோக்கியம் தரும் சுவையான தயிர் சட்னி செய்வது எப்படி?

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கால் லிட்டர் தயிரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் வரமிளகாய் தூள் 2 ஸ்பூன், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், சேர்த்து வதக்கவும்.

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க !
வெங்காயம் நன்றாக வதக்கிய பிறகு அதில் கலந்து வைத்த தயிர் கலவையை ஊற்றி கிளறவும். அதனுடன் மீதி இருக்கும் 2 ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

10 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து, அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும்.

சூப்பரான தயிர் சட்னி ரெடி.