காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது.

சுவையான செட்டிநாடு காலிபிளவர் சூப் செய்வது எப்படி?
தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய்,

அல்சரேட்டிவ் கொலிட்ஸ் (ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும்.

காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது.

நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது.

மதியம் குட்டி தூக்கம் தூங்குவது நல்லதா?

சரி இனி வாழைத்தண்டு கொண்டு சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் - 1 1/4 கப்

பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1-2 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தக்காளி - 1 (நறுக்கியது)

பூண்டு - 3 பல்

இஞ்சி - 1/2 இன்ச்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக கீறியது)

கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - சுவைக்கேற்ப

தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !

தாளிப்பதற்கு...

பட்டை - 1 இன்ச்

கல்பாசி - 1

பிரியாணி இலை - 1

கிராம்பு - 4

அன்னாசிப்பூ - 1

சோம்பு - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

ஆண்களுக்கு மட்டும் அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணம் தெரியுமா?

செய்முறை:

சுவையான செட்டிநாடு காலிபிளவர் சூப் செய்வது எப்படி?

முதலில் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா !

பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது காலிபிளவரைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். 

காலிபிளவர் முக்கால்வாசி வெந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, நீரை வடிகட்டி தனியாக காலிபிளவரை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதன் பின் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்த்து, 

அத்துடன் 1 1/2-2 கப் நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
ஒவ்வாமை (அலர்ஜி) வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

பின்பு வேக வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து, 3-4 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, 

இறுதியாக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து அடுப்பை அணைத்தால், சுவையான செட்டிநாடு காலிபிளவர் சூப் தயார்.