திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !





திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

0

திணை ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். திணை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது.

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !
திணைக்கு சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பல வகையாக பிரிக்கிறார்கள். 

திணைக்கு ஆங்கிலத்தில் பாக்ஸ் டெயில் மில்லட் (Fox Tail Millet) என்று பெயர். கதிரோடு இருக்கும் திணையை பார்க்கும் போது 

குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன், வாழ்க்கை பாடமும் அவசியம் !

அது நரியின் வால் போல் தெரிவதால் ஆங்கிலேயர்கள் அந்த பெயரை வைத்து விட்டார்கள்.

திணை சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம். 

இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். 

திணையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.

திணைக்கு உள்ள சிறப்பு மற்ற தானியங்களை காட்டிலும் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. 

அரிசி, கோதுமை, கேவரகை காட்டிலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. 

குழந்தைகள் ஏன் சாப்பிடுவதில்லை? இது ஒரு நோயா?

கோதுமையில் இருப்பதை விட குறைவாக புரதம் இருந்தாலும் மற்ற பொருள்களோடு கலந்து உண்னும் போது இவை சமன் செய்யப்படுகிறது.

திணையில் உள்ள சத்துக்கள்

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
சூப்பரான ஆம்லெட் புளிக்குழம்பு செய்வது எப்படி?

ஆரோக்கிய நன்மைகள்

அரிசி, சிறு தானிய வகைகளில் மிக ஒன்றான திணை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை பின்வரும் பகுதியில் காண்போம்.

நார்ச்சத்து

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

திணை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். 

வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.

நீரிழிவை கட்டுபடுத்தும்

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

அரிசி உணவுகள் அதிகம் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 

இதனால் சர்க்கரை சத்து அதிகம் உள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 
குழந்தைகளுக்கு ஃப்ரூட் பாப் சிக்கில் செய்வது எப்படி?

நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் திணை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

மன அழுத்தம் போக்கும்

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

அதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை உருவாக்கி மன அழுத்தத்ததை உருவாக்குகிறது. 

திணை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் உள்ளன. 

எனவே திணை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மன அழுத்த பிரச்சனைகளை தீர்க்கும்.

நம்முடைய இரத்தத்தை சுத்திகரிக்கும் கடுகு !

எலும்பு வலுவடையும்

திணை அரிசியில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையடையும்.

ஆண்களுக்கு நன்மை பயக்கும்

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

திணை நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தக் கூடியது. நரம்புகளுக்கு வலு கொடுத்து முறுக்கேற்றும் குணம் கொண்டது. 

இளவயது ஆண்களுக்கு அடிக்கடி திணை அரிசியில் செய்த திணை உப்புமா, திணை லட்டு, திணை புட்டு, 

திணை கஞ்சி , திணை முறுக்கு, தேனுடன் கலந்த திணை என்று விதவிதமாக செய்து கொடுப்பார்கள். 

இதனோடு திணையை இடித்து தேன் கலந்து களியாக்கி கொடுப்பார்கள். இது ஆண்மையை பெருக்கவும் உதவும்.

ஏன் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது? தெரியுமா? 

புரதச்சத்து நிறைந்தது

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

உடலில் உள்ள தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். திணை அரிசி புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். 

திணை அரிசியை கொண்டு செய்யபட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலின் தசைகள் நன்கு வலுபெறும். 

தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.

அழகைப் பேண பாலூட்டுவதை நிறுத்தலாமா?

பார்வை தெளிவடையும்

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

திணை அரிசியில் கண்களுக்கு நன்மையளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. 

இதனால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் பார்வை தெளிவடையும்.

மூளை ஆரோக்கியம்

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

உடலில் இரும்புச்சத்து போதுமானதாக இருந்தால் இவை உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சீராக எடுத்து செல்கிறது. 

மூளையின் செயல்பாட்டுக்கு பற்றாக்குறையின்றி ஆக்ஸிஜன் கிடைத்தால் அறிவாற்றல் பெருகும். நினைவுத்திறன் அதிகரிக்கும். 

முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும். மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் தருவதற்கு இரும்புச்சத்து அவசியம் தேவை. 

பிரசவத்திற்கு பின் மாதவிடாய் தாமதமாக வருகிறதா?

அதனால் இரும்புச்சத்து நிறைந்த திணை உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்காமல் தடுக்கிறது. 

திணையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

திணை உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். 

திணையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. 

ஆண்மை குறைபாடு

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

திருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 

திணையை அரிசியை மாவாக இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களி போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலின் நரம்புகள் முறுக்கேறும். 

உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

பெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்.. என்டோமெட்ரியம் - Endometrium !

உடல் எடையை குறைக்க

திகட்டாத திணை அரிசி தரும் நன்மைகள் !

திணை அரிசி புரதசத்து அதிகம் கொண்டது. அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாதது. 

திணையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். 

மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் !

தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.

இவ்வளவு நன்மைகளை கொண்ட திணை அரிசியை சாப்பிட்டு வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)