சத்துக்கள் அடங்கிய தக்காளி தோசை செய்வது எப்படி?





சத்துக்கள் அடங்கிய தக்காளி தோசை செய்வது எப்படி?

0

முக்கியமாக இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறியாக தக்காளி உள்ளது. தக்காளியை கொண்டு சாலட், பழச்சாறுகள் மற்றும் சூப்கள் போன்றவற்றை செய்கின்றனர். 

தக்காளி தோசை செய்வது எப்படி?

தக்காளியில் வைட்டமின் ஏ, கே, பி1, பி3, பி5, பி6, பி7 மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.

மேலும் கூடுதலாக இதில் ஃபோலேட், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், கோலின், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. எனவே தக்காளியை உட்கொள்வது மூலம் நாம் பல வகையான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.

ஏன் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

தக்காளியில் உள்ள லைகோபீன் ஆனது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. 

சமைத்த தக்காளியானது உடலில் லைக்கோபீன் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே சமைத்த தக்காளியானது பச்சை தக்காளியை விடவும் அதிக பயனளிக்கிறது.

தக்காளியானது தினமும் நமது உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் சியை கொடுக்கிறது. இயற்கையாகவே இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. 

இது உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் இது வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

நமது நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த இது உதவுகிறது. 

இரத்தம் உறைதலுக்கு உதவக்கூடிய வைட்டமின் கேயானது தக்காளியில் அதிகமாக உள்ளது. எனவே தக்காளி ஒரு மல்டி வைட்டமின் உணவு என கூறலாம்.தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. 

அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. 

அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.  உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

சரி இனி தக்காளி தோசை செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை :

பச்சரிசி - 250 கிராம்

சிகப்பு மிளகாய் - 6

தக்காளி - 3

நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்

கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கீலாய்டு [Keloid] தழும்பு இது வேற !

செய்முறை :

தக்காளி தோசை செய்வது எப்படி?

அரிசி, கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். புளி, தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.

தோசைக்கல்லைக் காய வைத்து, மாவை கரண்டியில் எடுத்து, தோசைக்கல்லின் விளிம்பில் இருந்து, சுற்றி ஊற்றவும்.

அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள் !

சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும். தோசையைத் திருப்பிப் போட்டு எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)