ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?





ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

0

நம்ம வீட்டுல இருக்கிறவங்க எல்லாருக்குமே வெஜிடபிள் சூப் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஹோட்டலில் செய்யும் வெஜிடபிள் சூப்புக்கு சுவை அதிகம். 

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?
நம்முடைய வீட்டில் சூப் வைத்தாலும், ஹோட்டலில் வைப்பது போல் அவ்வளவு சுவையாக இருப்பதில்லை என்று கட்டாயம் நம் குழந்தைகள் சொல்லுவார்கள். 

ஐந்தே நிமிடத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா?

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த மாதிரி உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து, பசியைத் தூண்டும் ஹோட்டல் ஸ்டைலில் சூப் வைப்பது எப்படி? என்று தெரிந்து கொள்ளலாமா? 

தேவையானவை :

முட்டைக்கோஸ் - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

கேரட் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 3

ஸ்வீட் கான் - ஒரு கைப்பிடி

பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி

காளான் - 100 கிராம்

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

நெய் - ஒரு ஸ்பூன்

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிதளவு

கான்ஃபிளவர் மாவு - 1/4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - இரண்டு டம்ளர் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், இந்த காய்களை தேவையான அளவு மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஸ்வீட் கான் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். 
கார்போ ஹைட்ரேட் உணவுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !

உங்களுக்கு தேவைப்பட்டால் பச்சை பட்டாணி, காளான் போன்ற பொருட்களையும் இந்த சூப்பில் சேர்த்துக் கொள்ளலாம். 

முதலில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். 

ஒரு விசில் வைத்தால் போதும். காய்கறிகள் நன்றாக வெந்து விடும். அடுத்ததாக கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி துருவிய இஞ்சி சேர்த்து, 

நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள் !

அடுத்ததாக பொடியாக வெட்டிய பூண்டு 2பல் (தோல் உரித்தது) சேர்த்து, நன்றாக வதக்கவும். அதன் பின்பு, ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து, 3 நிமிடம் வரை வதக்க வேண்டும். 

வெங்காயம் நன்றாக சுருங்க வேண்டும். அதன் பின்பாக வேக வைத்து, தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீரோடு சேர்த்து விடுங்கள். 

சூப்பிற்கு தண்ணீர் அதிகமாக தேவைப்பட்டால் இந்த இடத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். காய்கறி வேக வைக்கும் போது பாதி அளவு தான் உப்பு சேர்த்து இருப்போம். 

தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக உணர்கிறீர்களா?

இந்த இடத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, இதில் சேர்த்திருக்கும் வெங்காயத்திற்கும், அதிகப்படியாக சேர்க்கும் தண்ணீருக்கும் கொஞ்சம் உப்பை போட்டுக் கொள்ள வேண்டும். 

நன்றாக கொதி வந்த பிறகு 1/4ஸ்பைன் கான்ஃபிளவர் மாவை, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து, சூப்பில் ஊற்றி, 

மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட்டு, மிளகுத்தூள் தூவி, கொத்த மல்லித்தழை தூவி, சூடாக பரிமாறினால் ஹோட்டல் ஸ்டைல் சூப் ரெடி.

குறிப்பு:

தேவைப்பட்டால் கான் சிப்ஸ், வெங்காயத்தாழ் தூவி குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள்! மிகவும் விருப்பமாக குடிப்பார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பசியைத் தூண்டும் தன்மையும் இதற்கு உண்டு. 

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த ஐரோப்பிய பெண் !

எந்த விதமான செயற்கை பொருட்களும் கலக்காத இந்த சூப்பை, வீட்டிலேயே தயாரித்து கொடுத்தால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)