தித்திப்பான மாம்பழ சட்னி செய்வது எப்படி?





தித்திப்பான மாம்பழ சட்னி செய்வது எப்படி?

0

மாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. 

தித்திப்பான மாம்பழ சட்னி
மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. 

இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. 

இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன. மாம்பழங்களில் அதிகளவு வைட்டமின் ஈ உள்ளது. 

அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஷ்ரூம் 65 செய்வது எப்படி?

பாலுணர்ச்சி தூண்டுதலுக்கும், வைட்டமின் E-க்கும் நிறைய தொடர்பு உள்ளது என்று ஆரம்ப காலங்களில் எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளில் தவறு ஏற்பட்டாலும், மேலும் செய்த சில ஆராய்ச்சிகள் இதை உண்மை என்றே சொல்கிறது.

கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழத்தில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மகாராஜா எக்ஸ்பிரஸில் திருமணம் செய்ய வேண்டுமா? படியுங்கள் !

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 2

கடுகு - தாளிக்க

வர மிளகாய்-2

வறுத்த சீரகப் பொடி- 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

வெல்லம்- தேவையான அளவு

நல்லெண்ணெய் - சிறிது

உப்பு - தேவையான அளவு

தினமும் நாட்டு மாடு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

செய்முறை :

தித்திப்பான மாம்பழ சட்னி செய்வது எப்படி?

முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெயை சிறிது ஊற்றவும். 

கடுகு தாளித்து, வரமிளகாயை அதில் சேர்க்கவும். பின் மாம்பழத் துண்டுகளை அவ்ற்றில் சேர்த்து வதக்கி மூடி வைத்திருங்கள். 

5 நிமிடம் கழித்து மாம்பழம் வெந்து கனிந்திருந்தால் அதனை நன்றாக மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் வெல்லத்தை சேருங்கள்.

அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வையுங்கள். பின் இறக்கி தேவைப்பட்டால் முந்தி திராட்சையுடன் அலங்கரிக்கலாம்.

கிளிமஞ்சாரோ மலையில் வளரும் ஒரு விசித்திரமான செடி இனம் ! 

இப்போது சுவையான மாம்பழ சட்னி ரெடி. இதனை வடை போண்டா அல்லது தோசைகளுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)