சோள இனிப்பு அடை செய்வது எப்படி? உயிரணுக்களின் உற்பத்திக்கு !





சோள இனிப்பு அடை செய்வது எப்படி? உயிரணுக்களின் உற்பத்திக்கு !

0

சோளம் அரிசியைப் விட பல மடங்கு சத்துக்களை கொண்ட ஒரு உணவுப் பொருள் ஆகும். இது புரதம், தாமிரம் மற்றும் இரும்பு சத்துக்களை கொண்டுள்ளது. 

உயிரணுக்களின் உற்பத்திக்கு சோளம்

இது உயிரணுக்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் கொழுப்பை குறைக்கவும் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்யவும் உதவுகிறது. 

சோளத்தில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலுவடைய செய்கின்றது. சோளத்தில் அதிகமான நார்சத்தும் மற்றும் மாவு சத்தும் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய வைக்கின்றது. 

தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதிலிருக்கும் நார் சத்து உணவு மண்டலத்தை சுத்தம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

வெயில் காலத்தில் மாம்பழம் ஏன் சாப்பிடணும் தெரியுமா?

எனவே பல சுகாதார நிபுணர்கள் நமது அன்றாட உணவில் சோளத்தை சேர்த்துக் கொள்ள சொல்லி பரிந்துரைக்கின்றனர்.

தேவையான பொருட்கள்:

சோளம் - 1 கப்

கடலைப் பருப்பு - அரை கப்

வெல்லம் - அரை கப்

முந்திரி - 6

ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

வாழை இலை - 5

ஹெர்னியா ஏற்பட அடிப்படை காரணம் !

செய்முறை :

சோள இனிப்பு அடை செய்வது எப்படி?

மேல் மாவுக்கு :

சோளத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கை விடாமல் கெட்டியாகக் கிளறி எடுக்கவேண்டும்.

மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டி இல்லாமல் மிருதுவாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பூரணம் செய்ய :

கடலைப் பருப்பை குக்கரில் ஒரு விசில் வேக விட்டு எடுத்து ஆற வைக்க வேண்டும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும்.

கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்க வேண்டும். அதில் அரைத்த கடலைப் பருப்பும் போட்டு கிளற வேண்டும். 

கிளறியதும் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி ஆற விட வேண்டும். வாழை இலையை லேசாக எண்ணெய் தடவி வெறும் தணலில் காட்டவேண்டும். 

அதில் சோள மாவை வைத்து தட்டி கடலைப் பருப்பு பூரணத்தை உள் வைத்து இலையை மூடி இட்லி பானையில் 15 நிமிடங்கள் வேக விட்டு எடுக்க வேண்டும். சோள இனிப்பு அடை ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)