குழந்தைகளை குஷிபடுத்த ஸ்ட்ராபெர்ரி இடியாப்பம் செய்வது எப்படி?





குழந்தைகளை குஷிபடுத்த ஸ்ட்ராபெர்ரி இடியாப்பம் செய்வது எப்படி?

0

ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், 

குழந்தைகளை குஷிபடுத்த ஸ்ட்ராபெர்ரி
மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன. 

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்  ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும்  புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. 

ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராபெர்ரிகளை வடிகட்டி, அதில் 2 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் செய்யவும். உங்கள் தோலில் உள்ள கறைகளுக்கு பேஸ்ட்டை தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும். 

இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், கறை மறையும். மேலும் இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

இத்தகைய ஸ்ட்ராபெர்ரி பழம் கொண்டு குழந்தைகளை குஷிபடுத்த ஸ்ட்ராபெர்ரி இடியாப்பம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையானவை: 

இட்லி அரிசி – 250 கிராம், 

ஸ்ட்ராபெர்ரி – 10, 

இஞ்சி – ஒரு சிறு துண்டு, 

நெய் – 4 டீஸ்பூன்,  

பேரீச்சம்பழம் – ஒன்று, 

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், 

சர்க்கரை – 2 டீஸ்பூன், 

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: 

குழந்தைகளை குஷிபடுத்த ஸ்ட்ராபெர்ரி இடியாப்பம்

இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 

வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). மாவு வெந்ததும் நன்கு பிசையவும். 

மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் 

(உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் 

(உருண்டைகளை சரிபாதியாக ‘கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக் கூடாது. அது தான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேக விட வேண்டும்).

அதன் பின்னர் ஸ்ட்ராபெர்ரி, இஞ்சியை தோல் சீவி நறுக்கி போட்டு, பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். 

வாணலியில் நெய் விட்டு அரைத்ததை போட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்து கிளறி, இடியாப்பத்துடன் கலக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)