காளான் அடிக்கடி உண்பதால் என்ன பயன்?





காளான் அடிக்கடி உண்பதால் என்ன பயன்?

0

காளான் (ஆம்பி[1]) என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. 

காளான் அடிக்கடி உண்பதால் என்ன பயன்?
இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. 

காளான் நிறைய பேர் விரும்பி சாப்பிடுவார்கள். சிலருக்குப் பெரிதான அதன் சுவை பிடிக்காது. 

காரணம் அதிலிருந்து வரும் வாசனை மற்றும் குறிப்பிட்ட சுவை எதுவும் இல்லாமல் இருப்பது. மஞ்சூரியன், சூப் போன்றவற்றைத் தவிர பெரிதாக நாம் வீடுகளில் அதை  அடிக்கடி சமைத்து சாப்பிடுவதில்லை. 

மிக அரிதாகவே வீட்டில் சமைத்து சாப்பிடுவதுண்டு. ஆனால் அடிக்கடி சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்று இந்த காளான். 

அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்திருக்கும் இந்த காளானின் நன்மைகள் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

​காளான்

வெள்ளை நிற காளான்

வெள்ளை நிற உணவுகளில் பெரும்பாலும் ஊட்டசத்து குறைவாக இருந்தாலும் காளான் அவற்றில் இருந்து வேறுபட்டது என்று “தி பின்டெரெஸ்ட் டயட்” என்ற நூலின் ஆசிரியர் மிடிஸி டுலன் கூறுகிறார். 

காளானில் பல்வேறு தாதுக்கள் உள்ளன. செலீனியம், பொட்டசியம், தாமிரம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் காளானில் காணப்படுகிறது. 

இவை பொதுவாக தாவர உணவுகளில் கிடைப்பதில்லை. ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வழிகள் என்று வரும் போது, 

காளான் ஒரு சக்திமிக்க ஆதாரமாக விளங்குகிறது என்பதை உங்களுக்கு வலியுறுத்த இங்கு 6 வித காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

​இளமையாக வைக்க உதவுகிறது

​இளமையாக வைக்க உதவுகிறது

காளான் மிக உயர் அடர்த்தி கொண்ட இரண்டு ஆன்டி ஆக்சிடென்ட்களைக் கொண்டுள்ளது. அவை எர்கோத்தியோனின் மற்றும் க்ளுட்டத்தின் ஆகியவை. 

இந்த இரண்டு ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஒன்றாக இருக்கும் போது அவை கடுமையாக உழைத்து உடல் சார்ந்த அழுத்தங்களை போக்கி 

வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளான சுருக்கம் போன்றவற்றை வர விடாமல் தடுத்து உடலை பாதுகாக்கிறது. உங்கள் இளமையைத் தக்க வைக்கிறது.

​மூளையைப் பாதுகாக்கும்

​மூளையைப் பாதுகாக்கும்

வயது அதிகரிக்கும் போது உங்கள் மூளையைப் பாதுகாக்க காளான் உதவுகிறது. 

மேலே கூறப்பட்ட இரண்டு ஆன்டி ஆக்சிடென்ட்களும் பார்க்கின்சன் மற்றும் அல்சைமர் பாதிப்புகளைத் தடுக்க உதவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . 

ஒரு நாளில் 5 பட்டன் காலங்கள் உட்கொள்வதால் வருங்காலத்தில் நரம்பு சார்ந்த நோய்கள் வருவதற்கான அபாயம் குறைகிறது என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

காளான்களை ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில் செய்வதற்கு மாற்றாக அடுப்பில் வைத்து நன்றாக வேக வைத்து உட்கொள்வதால் அதன் ஊட்டச்சத்து நன்மைகள் தக்க வைக்கப் படுகின்றன.

காளான்கள் உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. காளான் உட்கொள்வதால் மற்றொரு மனநலம் சார்ந்த நன்மை உண்டு. 

சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 2019ம் ஆண்டு நடத்திய ஆய்வில், 

ஒரு வாரத்தில் இரண்டு ¾ கப் காளான் உட்கொள்வதால் ,மிதமான அறிவாற்றல் குறைபாடுகள் குறைக்கப் படுவதாக தெரிவிக்கிப் படுகிறது.

​இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

​இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

காளான் பயன்படுத்தி செய்யும் உணவு வகைகள் மிகவும் ருசியானதாக இருக்கின்றன. 

காளானில் குளுட்டாமேட் ரிபோணுக்கிளியோட்டிட் இருப்பதால் இவை உப்புக்கு மாற்றாக விளங்குகின்றன. 

இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உணவிற்கு சுவையை அதிகரிக்க இந்த கூறுகள் உதவுகின்றன. ஒரு முழு கப் காளானில் 5மிகி அளவு சோடியம் மட்டுமே உள்ளது. 

சிவப்பு இறைச்சியில் காணப்படும் அதீத கலோரி, கொழுப்பு, கொலஸ்ட்ரால் போன்றவை இல்லாத சுவையான மற்றும் சிறந்த மாற்றாக காளான் உள்ளது.

​எலும்பு ஆரோக்கியம்

​எலும்பு ஆரோக்கியம்

உங்கள் எலும்புகளை வலிமையாக்க காளான் உதவுகிறது. நீங்கள் சந்தையில் காளான் வாங்கும் போது “UVB “ என்று குறிக்கப்பட்டுள்ள காளான்களை தாராளமாக வாங்கலாம். 

UVB என்பது வளரும் காலத்தில் சூரிய ஒளிக்கு வெளிப்பட்டவை என்று பொருள். பொதுவாக காளான்கள் இருட்டில் வளர்க்கப்படுகின்றன. 

சூரிய ஒளிக்கு வெளிப்பட்டு வளர்ந்திருப்பதால் எர்கோஸ்டரால் என்னும் கூறு நேரடியாக வைட்டமின் டி சத்தாக மாற்றம் புரிந்திருக்கும். 

இதனால் 3 அவுன்ஸ் UVB காளான் உட்கொள்வதால் உங்கள் உடலின் வைட்டமின் “டி” க்கான தினசரி தேவை பூர்த்தியாகிறது. மற்றும் உங்கள் எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

​உடலுக்கு எனர்ஜி

​உடலுக்கு எனர்ஜி

காளான் உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்க உதவுகிறது. காளான் “பி” வைட்டமின்களின் ஆதாரமாக விளங்குகிறது. 

ரிபோபிளவின் பி 2, போலேட் பி 9, பந்தொதெனிக் அமிலம் பி 5 , நியாசின் பி 3 ஆகியவை காளானில் அதிகம் உள்ளன. 

நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள ஆற்றலை உடல் பயன்படுத்த இவை உதவுகின்றன மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தியில் உதவுகின்றன. 

சிவப்பு இரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்ல உதவுகின்றன.

​அதிக காளான்களை எப்படி உட்கொள்வது?

​அதிக காளான்களை எப்படி உட்கொள்வது?

எளிய வழிமுறையில் தினமும் அதிக காளான்களை எவ்வாறு உட்கொள்வது என்று டுலன் குறிப்பிடுகிறார்.

1. காளான்களை மிகவும் சிறிய அளவில் நறுக்கிக் கொண்டு , இறைச்சியுடன் சேர்த்து அதனை சமைத்து மதிய உணவில் அல்லது இரவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

உங்களுக்குத் பிடித்தமான பர்கர் போன்ற உணவுகளில் இதனை சேர்த்து உட்கொள்வது மிகவும் எளிய வழிமுறையாகும்.

2. காளானை பொடி பொடியாக நறுக்கி, ஆம்லெட் , அல்லது முட்டை பொரியலில் சேர்த்து கலந்து உங்கள் காலை உணவாக அல்லது காலை மற்றும் மதிய உணவுக்கு மத்தியில் எடுத்துக் கொள்ளலாம்.

3. பாஸ்தா செய்யும் போது காய்கறிகளுடன் காளானையும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் இந்த உணவின் சுவை மேம்படும்.

4. காளான் மற்றும் மிளகு சேர்த்து மசாலாவாக தயாரித்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் உட்கொள்ளலாம்.

​எடை இழப்பு

​எடை இழப்பு

கொழுப்பு குறையவும் தசை வலிமை அதிகரிக்கவும் மெலிந்த புரதம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்தப் படுகிறது. 

மெலிந்த புரதத்துடன், குறைந்த கார்போ , மற்றும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாத, நார்ச்சத்து மிகுந்த உணவு ஒரு சிறப்பான உணவாகும். 

இந்த ஒருங்கிணைப்பு காளானில் அதிகம் காணப்படுவதால் எடை உழைப்பிற்கு இது ஒரு சிறப்பான உணவாக கருதப்படுகிறது. 

காளானின் ஊட்டச்சத்து அடர்த்தி காரணமாக காய்கறி மற்றும் பழங்களை விட உயர்வாகவே மதிப்பிடப்படுகிறது. 

மக்கள் அடிக்கடி உண்ணக்கூடிய எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு அரிய உணவு காளான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

காளான்களின் இனப்பெருக்கம்

காளான்களின் இனப்பெருக்கம்

காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலை, பூ, காய் என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. 

இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேரிடுகிறது.

​காளானின் பக்க விளைவுகள்

​காளானின் பக்க விளைவுகள்

இவற்றில் நல்லவை கெட்டவை என இலட்சத்துற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டு உள்ளனர். 

சில வகைக் காளான்கள் சத்துள்ளவை யாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்கு தீங்கு விளைவிப் பவையாகவும் காணப்படுகின்றன.

காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணளவு வரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.

காளானின் பல்வேறு வகைகளின் அதிக விஷத்தன்மை இருப்பதால் உட்கொள்ள ஏற்கப்படுவதில்லை. காளானின் இதர பக்க விளைவுகள் பின்வருமாறு..

1. உண்ணக்கூடிய காளான் வகைகளுடன் ஒரே ஒரு விஷத்தன்மை வாய்ந்த காளான் சேர்க்கப்படுவதால், அது மனித ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது. 

கோமா, தீவிர விஷ அறிகுறிகள், குமட்டல், வாந்தி, பிடிப்பு, வலிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.

2. சில வகை காளான்கள் ஜீரணமாகாத நிலையில் கொடிய அபாயங்களை விளைவிக்கும்.

3. எப்போது நிறமற்ற காளான்கள் அலல்து வேறுபட்ட நிறம் கொண்ட காளான்கள் வாங்கி உண்பதைத் தவிர்க்கவும்.

காளான்களின் பயன்கள்

காளான்களின் பயன்கள்

மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச் சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.

உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.

பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம் (Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது.

மதுபானங்கள் செய்யப் பயன்படுகின்றன. ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)