மல்டி தானிய பொடி இடியாப்பம் செய்வது எப்படி?





மல்டி தானிய பொடி இடியாப்பம் செய்வது எப்படி?

0

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. 

மல்டி தானிய பொடி இடியாப்பம்

இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப் படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.

தேவையானவை: 

இட்லி அரிசி – 250 கிராம், 

மிளகு – 10, 

காய்ந்த மிளகாய் – ஒன்று, 

துவரம் பருப்பு, கொள்ளு – தலா 4 டீஸ்பூன், 

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 2 டீஸ்பூன், 

நெய் – 4 டீஸ்பூன், 

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 


இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 

வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). மாவு வெந்ததும் நன்கு பிசையவும். 

மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும். 

(உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் 

(உருண்டைகளை சரி பாதியாக ‘கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக்கூடாது. அது தான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேக விட வேண்டும்).

மல்டி தானிய பொடி செய்முறை: 

வெறும் வாணலியில் கொள்ளு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். 

இதனுடன் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, இடியாப்பத்தின் மேல் தூவி நெய் விட்டுக் கலக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)