TiNDLE என அழைக்கப்படும் சிறப்புமிக்க 'சைவக் கோழி' வகையை முதன் முதலில் அறிமுகம் செய்கிறது சிங்கப்பூர்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Next Gen Foods எனும் நிறுவனத்தால் அது உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர், சோயா, சூரியகாந்தி எண்ணெய், தேங்காய்க் கொழுப்பு ஆகியவை கலந்திருக்கின்றன.
இந்த கோழியை தற்போது ரொட்டி, கடி அளவிலான வடிவத்தில் மட்டுமே விற்க சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அனுமதி வழங்கியுள்ளது. இதனை Eat Just ன் சமையல் நிபுணரும், அந்த தயாரிப்பு உருவாக்குநருமான Zachary Tyndall தெரிவித்தார்.
முழுக்க முழுக்க சைவ உணவான TiNDLE 'கோழியில்' துளி அளவும் அசல் கோழி இறைச்சி இல்லை. ஆனால் அதன் சுவையோ கோழியைப் போலவே இருக்குமாம்.
'லிப்பி' என்ற காய்கறி வகை உணவுப்பொருள் கொண்டு செய்யப்பட்ட TiNDLE, சமைக்கப்படும் போது கோழியைப் போன்ற அதே பழுப்பு நிறம், மணம் போன்றவற்றை வெளியாக்கும்.
சமையல் நிபுணர்களால், சமையல் நிபுணர்களுக்கு உருவாக்கப்பட்ட முதல் காய்கறி வகைக் கோழியே TiNDLE என்கிறது அந்நிறுவனம்.
TiNDLE கோழியை விற்கும் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. இம்மாதம் 18ஆம் தேதி முதல் விற்கப்படவுள்ள TiNDLE, 11 சிங்கப்பூர் உணவகங்களில் கிடைக்கும்.
அதன் விலை S$23 என்று 1880 நிறுவனர் மார்க் நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.