ஓம லேகியம் தயார் செய்வது எப்படி? prepare Oma Legium





ஓம லேகியம் தயார் செய்வது எப்படி? prepare Oma Legium

தேவையான பொருட்கள்.: 

ஓமம் 25 கிராம், 

மிளகு 10 கிராம், 

கண்டதிப்பிலி 10 கிராம், 

அரிசி திப்பிலி 10, 

சுக்கு ஒரு சிறிய துண்டு,

வெல்லம் 150 கிராம், 

சித்தரத்தை, விரலி மஞ்சள் தலா ஒரு சிறிய துண்டு, 

நெய் 100 மில்லி.

செய்முறை.: 

ஓம லேகியம்

ஓமம், மிளகு, சுக்கு, கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி, சித்தரத்தை, மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு நன்கு பொடிக்கவும். 

வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சி, செய்து வைத்த பொடியை சேர்த்துக் கிளறி, நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, ஆறிய உடன் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு.: 

வயிறு சரியில்லாத சமயத்தில் இந்த லேகியத்தில் இருந்து சிறிதளவு எடுத்து, உருண்டையாக உருட்டி அப்படியே சாப்பிடலாம்.

Tags: