சுவையான பெப்பர் அவல் செய்வது எப்படி?





சுவையான பெப்பர் அவல் செய்வது எப்படி?

0

சளி, இருமல் வந்து விட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டு விடலாம். தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும்.  

சுவையான பெப்பர் அவல்

வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.

வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட  வீக்கத்தைக் குறைக்கும்.  

தொண்டை உறுத்தலை நீக்கும். சளியையும் குறைக்கும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. 

ஆஸ்துமாவால் அவதிப் படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. சரி இனி மிளகு பயன்படுத்தி சுவையான பெப்பர் அவல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்

மிளகு – 1 டீஸ்பூன்

முந்திரி – 5

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு :

எண்ணெய் – 2 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

வரமிளகாய் – 2

செய்முறை:

முதலில் மிளகை வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து தனியாக வைக்கவும்.

முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் 

அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை போட்டு நன்கு கிளறி விட வேண்டும். தீயை மிதமாக வைக்கவும்.

உடல் வலிமை பெற மூங்கில் அரிசி !

கடைசியாக அதில் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறிஇறக்கினால், பெப்பர் அவல் ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)