கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்து நிறைந்த பழங்கள் !

கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்து நிறைந்த பழங்கள் !

0

உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். 

கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்து நிறைந்த பழங்கள்
தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். 

வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் மறக்கக் கூடாத விஷயம் !

மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம்.கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது. 

கால்சியம் நிறைந்த உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எந்தெந்த பழங்களில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

அத்திப்பழம் (Figs)

அத்திப்பழம் - Figs

அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. 100 மி.கி அத்திப் பழத்தில் 26 மி.கி கால்சியம் உள்ளது. மேலும் இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி 12 ஆகியவை அதிக அளவில் கிடைக்கின்றன. 

தினசரி இரண்டு அத்திப்பழங்களைச் சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும். 

இதனால் எலும்புகள் பலம் பெறும்.ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும், ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.  

கொடிமுந்திரி பழம் (Prunes)

கொடிமுந்திரி பழம் - Prunes

எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் கொடிமுந்திரி பழத்தில் காணப்படுகின்றன. இப்பழத்தில் காணப்படும் அதிகளவு விட்டமின் சியானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. 
சம்மர் விடுமுறை பெண்களுக்கும் தான் பெண்களே !

இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸினால் உண்டாகும் சளி, காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாவதோடு மீண்டும் வராமல் தடுக்கப் படுகின்றன. 

இப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

பெர்ரி பழம் (Berries)

பெர்ரி பழம் - Berries

சுவையும், சத்தும் மிகுந்த பெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவது உடலை ஆரோக்கியத்துடனும், ஆற்றல் மிக்கதாகவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்கும். 

பெர்ரி வகைப் பழங்கள்  ஓரினவகையை சார்ந்ததாகும். இவ்வகைப் பழங்கள் சதைப் பற்றுடன், சாறுத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கும். இவற்றில் விதைகள் சதையுடன் இணைந்து காணப்படும்.  

கிவி பழம் (Kiwi)

கிவி பழம் - Kiwi

சிட்ரஸ் வகை பழங்களுள் கிவி பழம் மிகவும் சுவையானதாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. 

கிவிப் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது. கிவி பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் வளமான அளவில் நிறைந்துள்ளது. 

ஹாஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள் தெரியுமா?

அதுவும் 69 கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் சுமார் 23.46 மிகி கால்சியம் நிறைந்துள்ளது. கிவி பழத்தில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன.

பப்பாளி பழம் (Papaya)

பப்பாளி பழம் - Papaya

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம், பீட்டாக்கரோட்டீன், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது. 

இந்த பப்பாளி பழத்தை முக்கியமாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஏனென்றால் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது அவர்களது உடல் மற்றும எலும்பு நன்றாக வளரும். 

நரம்புத் தளர்ச்சி இருப்பவர்கள் பப்பாளி பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். அது மட்டுமின்றி சருமம் பொழிவை அதிகரிக்க தினமும் பப்பாளி பழம் சாப்பிடலாம்.

ஸ்ட்ராபெர்ரி பழம் (Strawberries)

ஸ்ட்ராபெர்ரி பழம் - Strawberries

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் கால்சியம், விட்டமின் ஏ, சி, கே, மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும்  பெரிதும் உதவுகின்றன. 

தொப்புளில் வளையம் போடும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை !

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமச்சுருக்கங்களை வராமல் தடுத்திடும். சருமச் செல்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவி புரிகிறது. 

கொய்யாப்பழம் (Guavas)

கொய்யாப்பழம் - Guavas

கொய்யாப் பழத்தில் கால்சியம்,  வைட்டமின் சி, வைட்டமின் பி, மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். 

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும், குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது.  

லிச்சி பழம் ( Litchi)

லிச்சி பழம் - Litchi

இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடன் லிச்சி பழத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளன. 

ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை... உறைய வைக்கும் சம்பவம் !

லிச்சி மரத்தின் விதை, பூ மற்றும் கனி ஆகியவை நமது உடல் நலனை பாதுகாக்கும் வகையில் பலவிதமான மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. 

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். 

வாழைப் பழம் (Banana)

வாழைப் பழம் - Banana

வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு நிறங்களில் காணப்படுகிறது. வாழைப்பழத்தில் கால்சியம், பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. 

இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது. 

கண்ணாடிக்கும் கான்டாக்ட் லென்ஸ்க்கும் என்ன வித்தியாசம்?

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோ குளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.

ஆரஞ்சு பழம் (Orange)

ஆரஞ்சு பழம் - Orange
ஆரஞ்சுப் பழத்தில் கால்சியம் சத்து மட்டுமின்றி வைட்டமின் சி , பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. 

ஆரஞ்சு பழம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. 

ஆரஞ்சு பழ சுளைகளை தினமும் காலையில் சாப்பிட்டு வருவது நல்லது. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. மேலும்  எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது. 

அன்னாசிபழம் (Pineapples)

அன்னாசிபழம் - Pineapples

அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, 

பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. 

கருத்தடை மாத்திரை பயன் படுத்து பவர்கள் கவனத்துக்கு !

அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. 

கால்சியம் நிறைந்த உணவுகளை இருந்து கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)