பெண்களின் எலும்பு உறுதிக்கு முக்கியம் உணவு !





பெண்களின் எலும்பு உறுதிக்கு முக்கியம் உணவு !

0

பெண்களுக்கு மிகப்பெரிய சிக்கல் மெனோபாஸ்👍 காலத்துக்குப் பின் வரும் எலும்புச் சிதைவு நோய்கள். குறிப்பாக, உடலில் தேவையான அளவு கால்சியம் இல்லாததால் இந்தச் சிக்கல் உருவாகும்.
பெண்களின் எலும்பு உறுதிக்கு

இந்தச் சிக்கலைச் சரிசெய்ய உணவில் கவனம் செலுத்தினால் போதும். அதற்கு முக்கியமான ஒரு உணவு… வெங்காயம். 

பெண்களுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல் எலும்பு வளர்ச்சி மட்டுப்படும், அதன் ஆரோக்கியமும்👋 தடைபடும். வெங்காயம் அந்த சிக்கலைச் சரிசெய்யும் ஒரு நல்ல உணவு. 

உணவில் நிறைய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். புரோக்கோலி பெண்களுக் கான வரப்பிர சாதம் எனலாம். பெரிய மார்க்கெட்களில் கிடைக்கும். 

விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கவலைப் படாமல் வாங்கி உண்ணுங்கள். பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு என பெண்களின் எலும்புக்கு👋 உத்தரவாதம் தருகிறது புரோக்கோலி. 

தினமும் 200 கிராம் புரோக்கோலி சாப்பிட்டால் எண்பது வயதிலும் எலும்பு ஸ்ட்ராங்காக இருக்கும்!
எலும்பு உறுதிக்கு முக்கியம் உணவு

வால்நட்கள் கடைகளில் கிடைக்கும். கொஞ்சமாய் வாங்கிச் சாப் பிட்டால் போதும். இதிலுள்ள ஒமேகா-3 எலும்பின் அடர்த்தியைக் அதி கரிக்கும். தினமும் கொஞ்சம் வால்நட்டை👋 வாயில் போட்டுக் கொறி யுங்கள்.

நிறைய உப்பு சேர்த்துக் கொள்வதை அறவே நிறுத்த வேண்டும். இது கால்சியத்தை அதிகளவில் வெளியேறச் செய்கிறது. இதனால் உடலின் கால்சியம் சத்து குறைகிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக உணவில் உப்பைக் குறைத்துக் கொண்டே வந்தால், ஒரு கட்டத்தில் குறைவான உப்பே👍 நமக்குப் போதுமான சுவையைத் தந்து விடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)