சுவையான சீஸ் பிஸ்கட் செய்வது எப்படி?





சுவையான சீஸ் பிஸ்கட் செய்வது எப்படி?

சீஸ் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இதனை தினமும் 1/2 அவுன்ஸ் சிறிய அளவு சீஸ் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தை 13 சதவீதம் குறைக்கும் என்று சொல்லப் படுகின்றது. 
சுவையான சீஸ் பிஸ்கட் செய்வது எப்படி?
சீஸில் உள்ள குறுகிய சங்கிலி நிறைவுற்ற கொழுப்புகள் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் செய்யும். மேலும், சீஸில் உள்ள கால்சியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும். 

இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் செய்யும். சீஸில் உள்ள கால்சியத்தின் காரணமாக அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீஸில் நல்ல கொழுப்பு உள்ளதால் அதனை சரியான அளவில் தினந்தோறும் எடுத்துக் கொள்வது நல்லது. 

அதே போல், வெண்ணெயை விட சீஸில் கால்சியத்தின் அளவு அதிகமாக உள்ளது. சரி இனி சீஸ் பயன்படுத்தி டேஸ்டியான சுவையான சீஸ் பிஸ்கட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள் 
மைதா – 1 கப்,

துருவிய சீஸ் – 1/4 கப்,

பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,

சீரகம் – 1 டீஸ்பூன்,

வனஸ்பதி (அ) வெண்ணெய் – 1/4 கப்,

பால் – 1½ டேபிள் ஸ்பூன்.

உப்பு – 1 சிட்டிகை,

செய்முறை
சசுவையான சீஸ் பிஸ்கட் செய்வது
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், துருவிய சீஸ், வனஸ்பதி (அ) வெண்ணெய், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை உள்ளங்கையால் 1/4 இன்ச் தனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வைக்கவும்.
கடைசியாக வெண்ணெய் தடவிய செய்து வைத்த பிஸ்கெட்டை ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்து எடுத்து பரிமாறவும். சுவையான சீஸ் பிஸ்கெட் ரெடி.

குறிப்பு :
பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். 

இந்த  டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. 

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். 

இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப் பட்டவையாகவும் இருக்கலாம். 
Tags: