உருளைக்கிழங்கை எப்படி சமைத்தால் நன்மை தரும் !





உருளைக்கிழங்கை எப்படி சமைத்தால் நன்மை தரும் !

0
பொதுவாக, உருளைக்கிழங்கு பலருக்கும் விருப்பமான உணவாகவே இருக்கிறது. அதை பொரித்து, வறுத்து, அவித்து விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.
உருளைக்கிழங்கை எப்படி சமைத்தால் நன்மை
ஆரோக்கியமான உணவுகளுக்கு வரும் கெட்ட பெயர் மாவுச்சத்துள்ள காய்கறிகளில் உருளைக்கிழங்கிற்கும் உண்டு. பலர் கார்போ ஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக உருளைக்கிழங்கைத் தவிர்க்கிறார்கள். 

உருளைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கிறது. உருளைக் கிழங்கு சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியது என்பது இதன் சிறப்பம்சம்.
உருளைக்கிழங்கை வேக வைத்தாலும், வறுத்தாலும் சரி, இது அடிக்கடி ஒரு முக்கிய டிஷ், சைட் டிஷ் அல்லது சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது. 

உருளைக்கிழங்கு கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும் ஆற்றலை வழங்கும் உணவாகும். இதில் கார்போ ஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

உருளைக் கிழங்கு சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும் என்பது இதன் சிறப்பம்சம்.

தோலுடன் சமைக்கும் போது உருளைக்கிழங்கு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஃபைபர் போன்ற தாதுக்களை வழங்குகிறது. 

உருளைக்கிழங்கிலிருந்து மண்ணின் சுவையையும் ஊட்டச் சத்துக்களையும் பெற, நீங்கள் அவற்றை ஆரோக்கியமான முறையில் சமைக்க வேண்டும். 

உருளைக் கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் மட்டுமே அதன் எல்லா சத்துக்களும் நமக்கு முழுமையாக சென்றடையும். ஆனால் குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸினை கொடுத்து அவர்களை அதை சாப்பிடுவதற்கு மட்டுமே தயார் செய்கிறோம். 
உருளைக்கிழங்கை எப்படி சமைப்பது
உருளைக்கிழங்கு மூளையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அது மட்டுமில்லாமல் அதன் தோலிலும் கூட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன. அதன் தோலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

உருளைக் கிழங்கின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் :
 
உருளைக்கிழங்கை தோலுடன் சமைக்கும் போது அதன் சத்து இரட்டிப்பாகிறது. விட்டமின் சி, பி, கால்சியம் போன்ற சத்துகள் உருளைக் கிழங்கில் உள்ளது. இதில் 5கி நார்ச்சத்தும் 3கி புரோட்டீனும் உள்ளது.

உருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது உடல் எடையை குறைக்க முடியும். இதில் மிக குறைந்த அளவிலான கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது.

இதை தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகும். எனவே அடிக்கடி நோய் வாய்ப்படுபவர்கள் தோலுடன் உருளைக்கிழங்கை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
உருளைக்கிழங்கில் உள்ள பைடோகெமிக்கல் புற்று நோயை தடுக்கிறது. மேலும் புற்று நோய் இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாகாமல் தடுக்கலாம்.
உருளைக்கிழங்கு
இதன் தோலில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் இவை உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. 

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இரவில் உருளைக்கிழங்கை உணவுடன் சேர்த்து கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். 
உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)