பூசணி அவல் புட்டிங் செய்வது எப்படி?





பூசணி அவல் புட்டிங் செய்வது எப்படி?

எப்போதும் அரிசியை சாப்பிடும் நம்மில் பலர் ஒரு சில நாட்கள் சோம்பேறித் தனமாக இருக்கும் போது அவல் வாங்கி அதை தண்ணீரில் ஊற வைத்து கொஞ்சமாக தாளித்து 10 நிமிடத்தில் டிபன் செய்து சாப்பிடுவோம். 
பூசணி அவல் புட்டிங்
அதுவும் சோம்பேறித் தனமாக இருக்கும் பட்சத்தில் பாலில் ஊற வைத்து சக்கரை சாப்பிட்டு சாப்பிடுவோம். அவல் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட்டுகளின் நல்ல ஆதாரங்களில் ஒன்றாகும். 

இது உங்களை உற்சாகப்படுத்த உடலுக்குத் தேவைப்படுகிறது. இது பரிந்துரைக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்டுகளில் சுமார் 76.9% மற்றும் கொழுப்புகளில் 23% நிறைந்துள்ளது. 

அதனால் உடலில் கொழுப்பு சேராமல் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். அவலில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது உங்களை சுறுசுறுப்பாக இருக்கவும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். 

சமைத்த போஹாவின் ஒரு கிண்ணத்தில் சுமார் 250 கலோரிகள் உள்ளன, இது உங்கள் மூளையை தடையின்றி செயல்பட ஊக்குவிக்கும். இந்த அவலை காலை டிபனில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். 

குறிப்பாக, கோதுமை அவல் சாப்பிட சொல்கிறார்கள். பல்வேறு சத்துக்கள் இந்த அவலில் உள்ளதால், காலை உணவில் சாப்பிடும் போது, நாள் முழுவதும் தேவைப்படும் சத்துக்கள் இதன்மூலம் கிடைத்து விடுகின்றன.

தேவையான பொருட்கள்.: 
துருவிய வெள்ளைப் பூசணி – அரை கப், 

ஊறவிட்டு வடிகட்டிய அவல் – ஒரு கப், 

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன், 
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, 

உப்பு – தேவையான அளவு.

தாளிக்க.: 

கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய் – சிறிதளவு, 

கீறிய பச்சை மிளகாய் – 3.

செய்முறை.: 
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். இதில் பூசணித் துருவல் சேர்த்து வதக்கி… 

ஊறிய அவல், உப்பு, வேர்க்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, உதிர் உதிராக ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இது, வயிற்றுக்கு இது குளுமையோ குளுமை !
Tags: