பேபி கார்ன் காளான் சூப் செய்வது எப்படி?





பேபி கார்ன் காளான் சூப் செய்வது எப்படி?

0
காளான்கள் சிடின் மற்றும் பீட்டா-குளுக்கனின் நல்ல மூலமாகும், இது கொழுப்பை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பேபி கார்ன் காளான் சூப் செய்வது
இந்த காளான்கள் பல்துறை திறன் கொண்டவை. அவை உலகெங்கிலும் உள்ள மக்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி, காளான்களை தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர். 

தொழில்நுட்ப ரீதியாக பூஞ்சை/காளான்கள் பொதுவாக காய்கறிகளின் பிரிவில் வைக்கப் படுகின்றன. காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, 

குறிப்பாக அவை பீட்டா-குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது. எனவே, பெரும்பாலான உணவுகளைப் போலவே ஊட்டச்சத்து அடர்த்தியான, காளான்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன.

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் - 1 கப்
தண்ணீர் - 4 கப்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

முட்டைக்கோஸ் - சிறிதளவு


மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

சோள மாவு கரைசல் - 4 மேஜைக்கரண்டி

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

உப்பு - சுவைக்க

செய்முறை

பேபி கார்னை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லி, குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காளானை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். 

அடுத்து அத்துடன் பேபி கார்ன் மற்றும் காளான், உப்பு மற்றும் மிளகு சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளவும். அதில் சோயா சாஸ், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். 

சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் சேர்க்கவும். இந்த கலவை கெட்டியாக வரும் வரை கிளறி பின் அதில் கொத்தமல்லி இலை, முட்டைக்கோஸ் சேர்க்கவும். . அடுப்பை நிறுத்தி விட்டு பின் சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)