சுவையான முட்டை காபி செய்வது எப்படி?





சுவையான முட்டை காபி செய்வது எப்படி?

ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. ஆனால், இந்த வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர் தான் இருக்கிறது. 
சுவையான முட்டை காபி செய்வது எப்படி?
10 சதவீதம் மட்டுமே புரதம் இருக்கிறது.. கொழுப்பும் சுத்தமாக இல்லை.. கார்போ ஹைட்ரேட் சத்தும் மிகக்குறைவு. கார்போ ஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம் உள்ளன. 

இதைத் தவிர, செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 போன்ற 10 வகையான வைட்டமின்கள் இருக்கின்றன. இதைத் தவிர, கால்சியம், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.

முட்டையில் நல்ல கொழுப்புகளே உள்ளதால், எந்த ஆபத்தும், முட்டையால் ஏற்படாது என்கிறார்கள். உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக முட்டை சாப்பிடலாம். 

முட்டையில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்த்து விட்டு, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.. அதிலும் பிராய்லர் கோழி முட்டைகளை விட நாட்டுக்கோழி முட்டைகளை சாப்பிட்டால் அதைவிட சிறப்பு.

தேவையானவை : 

சுடுநீர் – 3/4 கப்

முட்டை – 1

காபி – 1 தே.கரண்டி

சீனி – 2 1/2 தே.கரண்டி

செய்முறை :-
முட்டை காபி
முதலில் சுடுநீரில் சீனியையும், காபியையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இன்னொரு கப்பில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். 
இதில் கலந்து வைத்திருக்கும் காபியை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து சூட்டுடன் பருகவும். 

குறிப்பு : 

சுடுநீர் அதிக கொதியாக இருந்தால் முட்டை அவிந்து விடும். ஆகவே மிதமான சூட்டிலேயே கலந்து கொள்ளவும்.

முட்டை இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும் மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 2 முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். 

அதாவது வேக வைத்த முழுமையான முட்டையாக இருப்பின் 2 முட்டைக்கு மேல் சாப்பிடக் கூடாது. குறிப்பாக தினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் இருப்போர் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
Tags: