வரகு சேமியா மில்க் கேக் செய்வது எப்படி?





வரகு சேமியா மில்க் கேக் செய்வது எப்படி?

உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். 
வரகு சேமியா மில்க் கேக்
அதுவும் வீட்டில் பால் பவுடரும், மைதா மாவும் இருந்தால் போதும், ஈஸியாக மில்க் கேக் செய்யலாம். இந்த மில்க் கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது. 

அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் பால் கேக்கை செய்யலாம். முக்கியமாக இந்த பால் கேக்கை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். 
அந்த அளவில் ருசியாக இருக்கும். உங்களுக்கு மில்க் கேக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மில்க் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. 

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்னென்ன தேவை?
வரகு சேமியா - 100 கிராம்,

வெல்லம் - 100 கிராம்,

சோள மாவு - 2 டீஸ்பூன்,

நெய் - 50 கிராம்,

ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்,

பால் - 1/2 லிட்டர்,

டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்,

வெள்ளரி விதை - 1/2 டீஸ்பூன்,

மஞ்சள் கேசரி கலர் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் வரகு சேமியாவை பிரட்டி, பால் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் வெல்லம் சேர்த்து கிண்டவும். 

சோள மாவு, மஞ்சள் கலரை சிறிது நீரில் கரைத்து விட அல்வா இறுகும். மேலும் நெய் விட்டு கிண்டி விடவும். 
இதனுடன் ஏலப்பொடி தூவி இறக்கவும். வெள்ளரி விதை மற்றும் டூட்டி ஃப்ரூட்டியால் அலங்கரித்துப் பரிமாறவும்.
Tags: