பழவேற்காடு நண்டு மசாலா செய்வது எப்படி?





பழவேற்காடு நண்டு மசாலா செய்வது எப்படி?

நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது. நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன. 
பழவேற்காடு நண்டு மசாலா செய்வது எப்படி?
செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன்மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது. 

கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது. முடக்குவாதத்தையும் இந்த நண்டுகள் தடுக்கின்றன. ரத்த சுத்திகரிப்புக்கு பேருதவி புரிகிறது. 
நண்டில் குரோமியம் நிறைய உள்ளதால், ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீராக பராமரிக்கவும் இந்த கடல்வாழ் உயிரினம் உதவுகிறது. 

காயங்களை ஆற்றும் தன்மை நண்டுகளுக்கு உண்டு. எனினும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவு நண்டினை சாப்பிட வேண்டும். 

கர்ப்பிணிகள் டாக்டர்களின் அட்வைஸ் இல்லாம்ல நண்டு சாப்பிடக் கூடாது. சரி இனி நண்டு பயன்படுத்தி டேஸ்டியான பழவேற்காடு நண்டு மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
என்னென்ன தேவை?

நண்டு - 250 கிராம்,
வெங்காயம் - 200 கிராம்,

தக்காளி - 100 கிராம்,

பச்சை மிளகாய் - 5,

கறிவேப்பிலை- 1 கொத்து,

மிளகாய்த்தூள் - 25 கிராம்,

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,

புளி கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

சோம்பு - 1 டீஸ்பூன்,

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 100 மி.லி.
எப்படிச் செய்வது?
பழவேற்காடு நண்டு மசாலா
கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு புளி கரைசல் சேர்த்து நன்கு கொதித்ததும், நண்டு சேர்த்து குறைந்த தீயில் வேக விட்டு இறக்கவும். 
கடைசியாக கொத்த மல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags: