மட்டன் பருப்பு குழம்பு செய்வது எப்படி?





மட்டன் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:
சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 30 கிராம்

எலும்பில்லாத ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம்

இஞ்சி (விழுது) - 30 கிராம்

பூண்டு (விழுது) - 60 கிராம்

கரம்மசாலாத் தூள் - 20 கிராம் (பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு)

பச்சை மிளகாய் - 30 கிராம்

எண்ணெய் - 10 மில்லி.

நெய் - 100 கிராம்

துவரம் பருப்பு - 100 கிராம்

பாசிப்பருப்பு - 25 கிராம்

மஞ்சள்தூள் - 10 கிராம்

பெருங்காயத்தூள் - 10 கிராம்

சீரகம் - 5 கிராம்

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டன் பருப்பு குழம்பு
பிரஷர் குக்கரில் ஆட்டுக்கறி (மட்டன்), உப்பு, இஞ்சி விழுது, பாதியளவு பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம். தக்காளி எல்லாம் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். 
பிறகு வேறொரு குக்கரில் பருப்புகள், மீதமுள்ள பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். 

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து வேக வைத்த ஆட்டுக்கறி, வேகவைத்த பருப்புகளைச் சேர்த்து எடுக்கவும். 

சிறிது பெருங்காயத்தூள், கரம்மசாலா தூவி அடுப்பை அணைக்கும் போது கொத்த மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
Tags: