நவாபி புலாவ் செய்வது எப்படி?





நவாபி புலாவ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 5௦௦ கிராம்

வெங்காயம் – 2௦௦ கிராம்

பச்சை மிளகாய் – 4 (கீறியது)

குங்குமப்பூ – 1 சிட்டிகை

இஞ்சி – சிறுதுண்டு

பூண்டு – 8 பல்

முந்திரி பருப்பு – 20 கிராம்

மட்டன் ஸ்டாக் (அல்லது தண்ணீர்) – 1 லிட்டர்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
நவாபி புலாவ் செய்வது
அரிசியைக் கழுவி சிறிது நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு விழுதாகவும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் வெங்ககாயம், மிளகாய், முந்திரி இவற்றை வதகவும். அரிசியையும் சேர்த்து வதக்கவும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.
சிறிதளவு பாலில் குங்குமப்பூவை கரைத்து ஊற்றி, போதுமான உப்பு சேர்க்கவும். இருபங்கு மட்டன் ஸ்டாக் சேர்த்து, தம்மில் வைத்து இறக்கவும்.
Tags: