பட்ஸ் இல்லாமல், காதில் உள்ள அழுக்கை வெளியேற்ற?





பட்ஸ் இல்லாமல், காதில் உள்ள அழுக்கை வெளியேற்ற?

பொதுவாக காதுகளில் அழுக்கு சேர்வது இயற்கையான விஷயம். அவற்றை சுத்தம் செய்ய நாம் காட்டன் பட்ஸ் பயன்படுத்தி வருகிறோம். 
காதில் உள்ள அழுக்கை வெளியேற்ற?

ஆனால் அது காதுகளுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? 

காட்டன் பட்ஸ் பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதால் சில நேரங்களில் இந்த காட்டன் காதுகளில் ஒட்டிக் கொள்ள நேரிடுகிறது. 
அதனால் காலப்போக்கில் காது கேளாமை பாதிப்பு உண்டாவதற் கான வாய்ப்பு ஏற்படுகிறது.

காட்டன் பட்ஸ் பயன்படுத்தி காதில் உள்ள அழுக்கை அகற்றுவதால் காது வலி, காது கேளாமை போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாவதாக சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. 

ஆகவே காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதற்கு மாற்றாக சில எளிய வீட்டு தீர்வுகள் பயன்படுத்தி அழுக்கை அகற்றலாம்.

பூண்டு எண்ணெய்
பூண்டு எண்ணெய்

நமது பாட்டிகள் காலத்தில் அவர்கள் காதுகளுக்கு கடுகு எண்ணெய் ஊற்றி காதுகளை சுத்தம் செய்தனர். ஆகவே இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம் என்றும் கூறலாம். 
இருப்பினும் கடுகு எண்ணெய்க்கு பதிலாக உங்கள் காதுகளில் பூண்டு எண்ணெய் பயன்படுத்தலாம். பூண்டு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

பூண்டு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?
பூண்டு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?
பூண்டு கிருமி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டது. ஆகேவ காதுகளில் உள்ள அழுக்கை அகற்ற பூண்டு எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். 

மேலும் காதுகளில் உள்ள துர்நாற்றத்தை போக்கவும், தொற்று பாதிப்பை போக்கவும் இது உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து அதில் 4-5 தோல் உரித்த பூண்டு பற்கள் சேர்த்து 10-12 நிமிடங்கள் கொதிக்க விடவும். 

பிறகு இந்த எண்ணெய்யை வடிகட்டி காதுகளில் விடவும். வெதுவெதுப்பான எண்ணெய் சேர்ப்பது சிறந்த நன்மையைத் தரும். எண்ணெய் மிகவும் சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா

சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பேக்கிங் சோடா சிறந்த தீர்வைத் தருகிறது. காதுகளில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கவும் இது உதவுகிறது. 
இரண்டு ஸ்பூன் தண்ணீரில் 4 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். இந்த திரவத்தை காதுகளில் சில துளிகள் விட்டு பின்பு காதுகளை சுத்தம் செய்யவும். 

இப்படி செய்வதால் காதுகளில் உள்ள துர்நாற்றம் விலகி, அழுக்கும் எளிதில் வெளியேறும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர்
காதுகளில் உண்டாகும் துர்நாற்றம் தீருவதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலத் தன்மை காதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற உதவுகிறது. 

2 ஸ்பூன் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ளவும். 

இந்த திரவத்தை காதுகளில் விட்டு இரண்டு நிமிடம் கழித்து சுத்தம் செய்யவும். இதனால் காதுகளில் உள்ள துர்நாற்றம் மற்றும் அழுக்கு சீக்கிரம் வெளியேறும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு
ஹைட்ரஜன் பெராக்ஸைடு

காதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற பெரும்பாலும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது. 

இந்த ரசாயனம் பயன்படுத்துவதால் காதுகளில் நுரை பொங்கி அதன் மூலம் காதில் உள்ள அழுக்கு கரைகிறது. 

இதனால் அழுக்கை வெளியேற்றுவது சுலபமாகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு நேரடியாக காதுகளில் சேர்க்கப்படக் கூடாது.
3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் பாதி அளவு தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 

பிறகு காட்டன் பட்ஸ் பயன்படுத்தி அழுக்கை வெளியேற்றலாம். காது தொற்று, காதில் இரத்தம் வடிதல், காது வலி போன்ற பாதிப்புகள் இருந்தால் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
Tags: