மீல் மேக்கர் என்பது என்ன? அது எதிலிருந்து கிடைக்கிறது?





மீல் மேக்கர் என்பது என்ன? அது எதிலிருந்து கிடைக்கிறது?

சோயா பீன்ஸ் இதன் மூலப்பொருள். அதை செக்கில் எண்ணெய் எடுப்பது போன்று தயாரிக்கும் பணி நடக்கும் பொழுது கிடைக்கும் பொருள்கள், 
மீல் மேக்கர் என்பது என்ன?
சோயா சாஸ்,சோயா புரதம், சோயா பால், சோயா எண்ணெய், என்று பல தயாரிப்புகளுக்கு பின் கிடைக்கும் மீல் மேக்கர்.

சக்கை அல்லது புண்ணாக்கு என்று சொல்லலாம். கொரிய நாடு இதன் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது.பலவித தயாரிப்புகளும் நமது உள்ளூர் கடைகளில் கிடைக்கிறது.

மமீல் மேக்கர் என்பது ஒரு கம்பெனியின் பெயர். அவர்கள் இதனைத் தயாரித்து விற்றதால் இதற்கு மீல் மேக்கர் என்று பெயர் வந்தது.

மீல் மேக்கர் சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது.

இதை பார்ப்பதற்கு இறைச்சி போல இருக்க வேண்டும் என்பதற்காக சிறு சிறு உருண்டைகளாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
1980 களில் திருமண நிகழ்ச்சிகளில் போடப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் இந்த மீல் மேக்கர் கலக்கப்பட்டது. 

இதனுடைய சுவை பிடித்துப் போக அனைவரும் அதனை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். மீல் மேக்கரை அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக ஆண்கள் இதனை சாப்பிடும் போது அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எனவே இதனை அளவோடு சாப்பிடுவது அனைவருக்கும் நல்லது. சைவப் பிரியர்களின் ஸ்பெஷல் ஃபுட் லிஸ்ட் எடுத்தால் அதில் காளான், பனீர், மீல் மேக்கர் கண்டிப்பாக இடம்பெறும். 
மீல் மேக்கரை பலரும் சாதாரண உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். காரணம் இதன் விலை குறைவு என்பதால். மீல் மேக்கரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. 

சோயா சங்க்ஸ் என அழைக்கப்படும் மீல் மேக்கர் சோயாவுடன் தயாரிக்கப் படுகிறது. சோயாவில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு அந்த மாவை உணவுப் பொருளாக தயாரிக்கப்படுகிறது. 

மீல் மேக்கரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதில் கொழுப்புகள் கிடையாது. மீல் மேக்கரில் புரதம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 

மீல் மேக்கரை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Tags: