முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி?

முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
முளைக்கட்டிய கொள்ளு, பச்சை பயிறு, கொண்டைக்கடலை, பட்டாணி - 2 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி

லெட்யூஸ் - சிறியது ஒன்று

கொத்தமல்லி தழை - சிறிதளவு

வெள்ளரிக்காய் - 1

மாங்காய் - 1

கேரட் - 2

எலுமிச்சம்பழம் - 1

உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட்
முளைக்கட்டிய தானியங்களை குக்கரில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மாங்காய், வெள்ளரிக்காய் லெட்யூஸ், கொத்தமல்லி தழை ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்த்ல வேகவைத்த தானியங்களுடன் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து கிளறவும். 

அத்துடன் உப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும் சூப்பரான முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் ரெடி.
Tags: