கேழ்வரகு வெங்காயம் ரொட்டி செய்வது எப்படி?





கேழ்வரகு வெங்காயம் ரொட்டி செய்வது எப்படி?

கேழ்வரகு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று கேழ்வரகு, வெங்காயம் சேர்த்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்
கேழ்வரகு வெங்காயம் ரொட்டி
தேவையான பொருட்கள்:
வைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல் !
கேழ்வரகு மாவு - 1 கப்,

பெரிய வெங்காயம் - 2,

பச்சை மிளகாய் - 3,

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - தேவைக்கேற்ப,

மிளகாய்வற்றல் - 3,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

தண்ணீர் - தேவைக்கேற்ப.

தாளிப்பதற்கு…

கடுகு - அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
சர்க்கரை நோய் என்றால் என்ன?
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சிறிது இளக்கமாகப் பிசைய வேண்டும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், ப. மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

வதக்கிய பொருள்களை கேழ்வரகு மாவுடன் சேர்த்து பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும். 

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை கையில் எடுத்து, கல்லில் தட்டி இரு புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
தூக்கமின்றி இருக்கிறீர்களா? அதற்கான காரணம் !
சூப்பரான கேழ்வரகு வெங்காய ரொட்டி ரெடி. எவ்வளவு அதிகம் வெங்காயம் போடப் படுகிறதோ அந்த அளவுக்கு வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.
Tags: