தோசை, சாப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பரான முட்டை பணியார குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முட்டை பணியார குருமா
தேவையான பொருட்கள் :
முட்டை பணியாரம் செய்ய :

முட்டை – 4,

வெங்காயம் – 2,

ப.மிளகாய் – 2 சிறியது,

உ.கடலை – 2 மேஜைக்கரண்டி,

உப்பு – தேவைக்கேற்ப,

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை.

குருமாவிற்கு :

வெங்காயம் – 2,

தக்காளி – 2,

தேங்காய் – 1 சிறியது,

ப.மிளகாய் – 2,

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,

எண்ணெய் – 2 தேக்கரண்டி,

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,

உப்பு – தேவைக்கேற்ப,

பூண்டு – 7 பல்,

இஞ்சி – 1 அங்குல துண்டு,

சோம்பு – 1 டீஸ்பூன்.
முட்டை பணியாரம் செய்முறை :
முட்டை பணியாரம்
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். உடைத்த கடலையை பொடித்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், பொடித்த உடைத்த கடலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்த கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

குருமா செய்யும் முறை :

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் சோம்பு போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கிய பின் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குருமாவில் பச்சை வாசனை போனவுடன் கடைசியாக முட்டை பணியாரத்தை சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் சேர்த்து இறக்கவும்.

இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசையுடன் சாப்பிடலாம்.