புண் உள்ள இடத்துக்கு தகுந்தவாறு அறிகுறிகள் வேறுபடும். உணவுக் குழாயில் புண் (Oesophageal Ulcer); உள்ள நிலையில் நெஞ்சில் எரிச்சல் ஏற்படும். புகை, மதுப் பழக்கம் இருந்தால் இந்த எச்சல் அதிகமாகும்.
உணவு குழாய் புண்

சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த வற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் உணவுக் குழாயி லிருந்து இரைப்பைக்குச் செல்லும் இடத்தில் உள்ள சுருக்குத் தசை விவடைந்து, இரைப்பை யிலிருந்து அமிலம் மேல் நோக்கி வரும்.

மனித உடற்கூறு இயலின்படி வாயிலிருந்து வயிறு வரை ஒருவழிப் பாதைதான். சாலையில் ஒரு வழிப் பாதையில் செல்லும் நிலையில் விபத்து ஏற்படலாம் அல்லது போலீஸ்காரர் இல்லா விட்டால் விபத்து இல்லாமல் அன்றைய விதி மீறல் போய் விடும்.
ஆனால், வாய்-உணவுக் குழாய் - இரைப்பை ஒரு வழிப் பாதையாக இருப்பதற்கு, வயிற்றை உணவுக் குழாய் நெருங்கும் போது உள்ள சந்திப்பில் உள்ள சுருக்கத் தசையே (Sphincter) காரணம். 

இது ஒரு சிறப்புத் தன்மையாகும். புகை, மதுப் பழக்கம், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் காரணமாக இந்த சுருக்கத் தசையை விவடையச் செய்து பிரச்னையை வரவழைத்துக் கொள்கிறோம். 

எனவே சுருக்கத் தசைக்கு முதல் மயாதை கொடுத்து புகை-மது போன்ற கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள். உணவு குழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ் பற்றி பார்ப்போம் !

தேவையானவை:

வெள்ளரிக்காய் - 1,

இஞ்சி - சிறிதளவு,

கற்றாழை - 3-4 துண்டுகள்,

இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உணவு குழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ் !

வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகிய வற்றைத் தோல் நீக்கிக் கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். 

இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்:

வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக் குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்து விடும். 
மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். 

ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும். 

இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.