தித்திப்பான பலாச்சுளை இலை அடை செய்வது எப்படி?





தித்திப்பான பலாச்சுளை இலை அடை செய்வது எப்படி?

பலாப்பழத்தில் வைட்டமின் C சத்து நிறைந்து காணப்படுகின்றன. இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பலாப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைகிறது.
தித்திப்பான பலாச்சுளை இலை அடை
மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற வேதிப்பொருட்களை விட வைட்டமின் சி யில் தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

இது மட்டுமல்லாமல், பலாப்பழம் சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றிற்கு நிவாரணம் தரும். யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? அஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. 

குறிப்பாக, உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது. மரத்திலேயே பழுக்காத பலாப்பழத்தை பழுக்கவைத்து சாப்பிட்டாலோ, நன்றாகப் பழுக்காத பழங்களை சாப்பிட்டாலோ பல உடல் தொந்தரவுகளை அவை கொடுக்கும்.

அனைவருக்கும் பலாப்பழம் மிகவும் பிடிக்கும். இன்று பலாப்பழம், வாழை இலை வைத்து சூப்பரான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பலாச்சுளைகள் - 20,

வெல்லம் - ஒரு கப்,

அரிசி மாவு - ஒரு கப்,

தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப,

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

வாழை இலை - 5,

நெய் - 5 டீஸ்பூன்.
செய்முறை :

பலாச்சுளையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கவும்.

பலாச்சுளை நன்றாக வதங்கியதும் அதில் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்துக் கெட்டியாக பிசையவும்.

வாழை இலையில் நெய் தடவி, பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து தட்டி, மேலே தேங்காய்த் துருவல் தூவி, மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்வது வைக்கவும்.
செய்த வைத்தவைகளை இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி. குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.
Tags: