கோவை ஆனந்தாஸ் நெய் போளி செய்வது எப்படி?





கோவை ஆனந்தாஸ் நெய் போளி செய்வது எப்படி?

இது நெய் போளி . கோவையில் இதை ஒப்புட்டு என்று சொல்வார்கள். இதை வடவள்ளி ஆனந்தாஸில் மாலை நேரத்தில் சுடச்சுட ஒப்புட்டு செய்து கொடுப்பார்கள். ருசிக்க மிகவும் பிரமாதமாக இருக்கும்.
கோவை ஆனந்தாஸ் நெய் போளி
இந்த ஒப்புட்டுடன் நன்றாக கனிந்த ஒரு வாழைப்பழம் மற்றும் இரண்டு தேக்கரண்டி உருக்கிய பசு நெய் விட்டு நன்றாக பிசைந்து உண்டு பாருங்கள் உங்கள் சொத்தை எழுதி வைக்க தோன்றும்.
டாக்டரின் உடல் மீண்டும் எடுக்கப்படுமா.. முறைப்படி அடக்கம் செய்யப்படுமா?
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு (அ) மைதா மாவு - ஒரு கப்

கடலைப் பருப்பு - ஒரு கப்

மண்டை வெல்லம் - கால் கிலோ

தேங்காய் - ஒன்று

ஏலக்காய் - 4

நல்லெண்ணெய் - சிறிதளவு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

நாட்டு மாட்டு பசு நெய் தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பது எப்படி?
செய்முறை:
கோதுமை மாவு அல்லது மைதாவுடன் மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல சற்று தளர்ச்சியாக பிசைந்து வைக்கவும்.
நீங்கள் சாப்பிடும் இந்த பொருட்கள் பெரிய காயத்தையும் சீக்கிரம் குணமாக்கிவிடும்?
பிசைந்தபின் மேலே சிறிது நல்லெண்ணெயை ஊற்றி 3 மணி நேரத்திற்கு அப்படியே வைத்திருக்கவும். கடலைப் பருப்பை முக்கால் வேக்காடாக வேக வைத்து எடுக்கவும்.

இதனுடன் நுணுக்கிய மண்டை வெல்லம் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக‌ அரைத்து எடுக்கவும். அதில் உப்பு சேர்த்து கலக்கவும்.

தேங்காயை துருவி நெய்யில் வதக்கி அரைத்து வைத்துள்ள பருப்பு, வெல்லக் கலவையுடன் சேர்த்து சிறிது நுணுக்கிய ஏலக்காயையும் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் பிசைந்து வைத்த மாவை எண்ணெய் தடவிய பூரிப் பலகையின் மேல் சிறிது சிறிதாக உருட்டி எடுத்து கையால் விரித்து விடவும். 

அதன் நடுவில் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பூ உருண்டையை வைத்து மூடவும்.

மீண்டும் அதை கையால் தட்டி அல்லது கட்டையால் உருட்டி சப்பாத்தி அளவிற்கு விரித்து விடவும். 

இதனை தோசை கல்லில் போட்டு, நெய் ஊற்றி இருபுறமும் சிவந்து வெந்ததும் எடுக்கவும். சுவையான போளி தயார்.
குறிப்பு.: 
வெள்ளரிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள் !
கேசரி கலர் மற்றும் மற்ற‌ கலர் பவுடர்கள் உடலுக்கு நல்லதல்ல ஆகவே எதிலும் கலர் பவுடர்கள் உபயோகிக்க வேண்டாம். ஆகவே நான் மஞ்சள்தூள் உபயோகித்துள்ளேன்.

மைதாவும் உடலுக்கு கெடுதல் தர கூடியது அதனால் மைதாவையும் உணவில் தவிர்க்கவும்.
Tags: