பீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ செய்வது எப்படி?

பீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ செய்வது எப்படி?

0
பச்சை பட்டாணி பெரும்பாலும் உலர வைக்கப்பட்டு பின்னர் விற்பனைக்கு வருகின்றன. காய்ந்த பட்டாணி ஆண்டு முழுவதிலும் விற்பனைக்கு கிடைக்கும். 
பீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ
அதே சமயம், உலர வைக்காமல் பச்சை பட்டாணி காயாகவே சில சமயம் விற்பனைக்கு வரும். பெரும்பாலும் குளிர் காலங்களில் பச்சை பட்டாணி காய்கள் விற்பனைக்கு வருகின்றன.

உலர்ந்த பட்டாணியை ஊற வைத்து நம் சமையலில் சேர்த்து கொள்ளலாம் அல்லது காய்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பச்சை பட்டாணியை நேரடியாக சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். 

வெஜ் பிரியாணி, வெஜ் குருமா, உருளைக்கிழங்கு மசால் போன்ற பல்வேறு உணவுகளில் பச்சை பட்டாணி முக்கிய இடத்தை பெறுகிறது.

பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. 

இது மட்டுமல்லாமல் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை இதில் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து மிகுந்த பச்சை பட்டாணியை குளிர் காலத்தில் சாப்பிடுவதன் மூலமாக இன்னும் சிறப்பான பலன்களை பெற முடியும்.

சரி இனி பட்டாணி பயன்படுத்தி டேஸ்டியான பீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1 கப்,

பொடியாக நறுக்கிய கேரட், - 1 கப்,

பச்சைப் பட்டாணி - 1 கப்,

வெங்காயம் - 1,

பச்சை மிளகாய் - 3,

இஞ்சித் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

பெரிய முழு தேங்காய் - 1,

உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தேங்காயை துருவி முதல், இரண்டாம், மூன்றாம் பால் எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் மூன்றாவது தேங்காய்ப் பால், வெங்காயம், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். 

பின்பு பீன்ஸ், கேரட், பட்டாணி சேர்த்து கொதிக்க விடவும். 
நன்கு வெந்ததும் உப்பு, இரண்டாவது தேங்காய்ப் பால் சேர்த்து சிறிது கொதித்ததும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கி கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)