சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் !

சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் !

பால் அல்லாத, தாவரங்கள் அடிப்படையிலானது தான் சோயா பால். இது சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப் படுவது. பால் சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்க்கும் சைவ பிரியர்களுக்கு ஏற்றது. 
சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய்

பாலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இதிலும் வைட்டமின் பி, வைட்டமின் டி, மக்னீசியம், ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை காணப்படுகிறது. 

இதனை குடிப்பதன் மூலம் உடல் நலம் பாதிப்பதை தடுத்திடலாம். அது மட்டுமல்லாது, சோயா பாலை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், ஆண்களு க்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைக்கவும் இது உதவுகிறது. சோயா பீன்ஸை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, அரைத்து, வடிகட்டி எடுக்கப் படுவது தான் சோயா பால். 
சோயா பீன்ஸில் உள்ள அனைத்து சத்துக்களும் தான் சோயா பாலை ஒரு ஆரோக்கியமான பானமாக மாற்றுகிறது. இப்போது, சோயா பாலில் உள்ள 7 அற்புத நன்மை களைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பை குறைக்கிறது
புரோஸ்டேட் புற்றுநோய்
ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படக்கூடும். 

சோயா பாலில் உள்ள பைட்டோ - ஈஸ்ட்ரோஜன்கள், டெஸ்டோஸ் டிரோனின் அதிகப் படியான சுரப்பைத் தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்கிறது
நீரிழிவு நோயை தடுக்க

சோயா பாலில் அதிகப் படியான நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. 

இரத்தத்தில் சர்க்கரை அளவு உறிஞ்சப் படுவதை தாமதப் படுத்துவதோடு, தடுக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இதனை, தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது
கொழுப்பின் அளவை குறைக்க
சோயா பாலை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்திட முடியும். 

இதில் உள்ள அதிகடிப் படியான நார்ச்சத்து, உடலில் உள்ள தீங்கு விளை விக்கக்கூடிய பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது
டல் எடை குறைக்க
சாதாரண பாலுடன் ஒப்பிடும் போது சோயா பாலில் சர்க்கரை குறைவாக இருப்பதோடு, நார்ச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. 

நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு வயிற்று பசியை தூண்டாது. இதன் மூலம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டின் அளவு குறைவதோடு, உடல் எடை குறைய உதவும்.

இரத்த நாளங்களை பலப்படுத்தும்
இரத்த நாளங்களை பலப்படுத்த

சோயா பாலில் உள்ள அதிகப் படியான ஒமேகா- 6 மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இரத்த நாளங்களை பலப்படுத்த உதவுகிறது. 
இது இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, இதய பாதிப்புகள் ஏற்படாமலும் தடுக்கிறது.

ஆஸ்டியோ போரோசிஸ் ஏற்படாமல் தடுக்கிறது
ஆஸ்டியோ போரோசிஸ் தடுக்க
ஆஸ்டியோ போரோசிஸ் என்பது எலும்புகள் பலவீன மடைந்து, எளிதில் உடையக்கூடிய நிலையாகும். சோயா பாலில் உள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. 

இதனால், எலும்புகள் பலம் பெறும். சோயா பால் பவுடரை கூட நீரில் கலந்து குடிப்பதன் மூலமாக கூட எலும்புகளை வலுவாக்கலாம்.

மெனோபாஸ் அறிகுறிகளை தடுக்கிறது
மெனோபாஸ் அறிகுறிகளை தடுக்க
பொதுவாக பெண்களுக்கு, மாதவிடாய் நின்றபிறகு உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைந்து விடும். இதனால், உடல் வெப்பம் வேகமாக அதிகரித்து விடும். 
சோயா பாலில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் இந்த அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது

சோயா பாலின் ஊட்டச்சத்துகள்
சோயா பாலின் ஊட்டச்சத்து

* சோயா பாலில் புரதம் நிறைந்துள்ளது.

* சோயா பாலில் உள்ள கால்சியம் எலும்பு களுக்கு வலு சேர்க்கும்.

* சோயா பால் பி-வைட்டமின்கள், இரும்புச் சத்து மற்றும் ஆரோக்கிய மான கொழுப்புகளின் நல்ல மூலமாகும்.

* சோயா பாலில் ஆரோக்கிய மான உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.

* சோயா பால் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதன் மூலமும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும் கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்துகிறது.
Tags: