தக்காளி – தேங்காய் பச்சடி செய்வது | Tomatoes - Coconut Pachadi Recipe !

தக்காளி – தேங்காய் பச்சடி செய்வது | Tomatoes - Coconut Pachadi Recipe !

0
தேவையானவை:
புளிக்காத தயிர் – 1 கப்,

தேங்காய் துருவல் – அரை கப்,

தக்காளி (நல்ல சிகப்பு நிறம்) – 2,

பச்சை மிளகாய் – 2,

இஞ்சி – ஒரு சிறு துண்டு,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – கால் டீஸ்பூன்,

எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை:
தக்காளி – தேங்காய் பச்சடி செய்வது
இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து சேருங்கள்.
விருப்ப முள்ளவர்கள், மல்லித் தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர் பச்சடி இது. (தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)