பச்ச முந்திரி குர்மா செய்வது | Making Green Cashew kurma !





பச்ச முந்திரி குர்மா செய்வது | Making Green Cashew kurma !

0
தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

பிரிஞ்சி இலை – ஒன்று

வெங்காயம் – மூன்று (நறுக்கியது)

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்’

காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – ஒரு கப் (நறுக்கியது)

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

தனியா தூள் – ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் அரைத்த விழுது – அரை கப்

வேக வைத்து அரைத்த முந்திரி பருப்பு – கால் கப்

கொத்த மல்லி – சிறிதளவு

செய்முறை
பச்ச முந்திரி குர்மா செய்வது
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி,

ஆகிய வற்றை ஒவொன்றாக சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

பிறகு, காரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும், 

பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

பின், தேங்காய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து முந்திரி விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு கொத்த மல்லி துவி ஏறகவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)