பருப்பை முதலில் நன்கு அலசி கால் மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி, பெருங்காயம்,1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 3 விசில் வைத்து இறக்கவும். வெந்த பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார் ரெசிபி
தேவையான பொருட்கள் ;

துவரம் பருப்பு - 200 கிராம்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன்

ரெடிமேட் சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்+ அரை டீஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

வெந்தயம் - கால் ஸ்பூன்

மிளகாய் வற்றல் -2

புளி - சிறிய எலுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

முருங்கைக்காய் - 1

கத்திரிக்காய் - சிறியது 5

பீன்ஸ் - 10

கேரட் - 1

கருவேப்பிலை, மல்லி இலை - சிறிது

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4-6

செய்முறை :
கத்திரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், கேரட்,, தக்காளி, மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய காய்கறியோடு, சின்ன வெங்காயம் 10, தக்காளி, புளிக்கரைசல், தேவைக்கு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைக்கவும்.

காய் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்குமாறு வைக்கவும். ஒரு விசில் தான் வைக்க வேண்டும். அதிக நேரம் வைத்தால் காய் குழைந்து விடும். 

விருபினால் 5 சின்ன வெங்காய த்தை தாளிக்க நறுக்கி வைக்கவும். இல்லாவிடில் வெங்காயம் சேர்க்காம லும் தாளிக்கலாம்.

குக்கரை திறந்தால் சாம்பாருக் கான காய் வெந்து இப்படி காணப்படும். நேரம் இருந்தால் தனியாக பாத்திரத்திலும் காய் வேக வைக்கலாம்.

அத்துடன் வேக வைத்த பருப்பை கலந்து மல்லி இலை தூவி கொதிக்க விடவும். உப்பு சரி பார்க்கவும். கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.

பின்பு தாளித்து கொட்ட ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை வெடித்ததும் சின்ன வெங்காயம் சிறிது நறுக்கியது சேர்த்து வதக்கி, 

அரை ஸ்பூன் சாம்பார் பொடி, பின்ச் பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கி உடன் ரெடியான சாம்பாரில் கொட்டவும்.

தாளித்து கொட்டியதும் கலந்து விடவும். கமகமக்கும் பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார் ரெடி. இதனை காலையில் இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம், 

மதியம் சாதத்திற்கும் அருமையாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெறும் அப்பளம் இருந்தாலே போதும்.