அருமையான சாஃப்ட் கேக் ரெசிபி செய்வது எப்படி?





அருமையான சாஃப்ட் கேக் ரெசிபி செய்வது எப்படி?

உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். 
அருமையான சாஃப்ட் கேக் ரெசிபி செய்வது எப்படி?
அதுவும் வீட்டில் ரவை இடியப்ப மாவும் இருந்தால் போதும், ஈஸியாக சாஃப்ட் கேக் செய்யலாம். இந்த மில்க் கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது. 

அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் சாஃப்ட் கேக்கை செய்யலாம். முக்கியமாக இந்த சாஃப்ட் கேக்கை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். 

அந்த அளவில் ருசியாக இருக்கும். உங்களுக்கு சாஃப்ட் கேக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாஃப்ட் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. 
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையானவை :

வறுத்த ரவை  - 1 கப்

இடியப்ப மாவு [அரிசி மாவு] - 1 கப்

முட்டை - 2

பட்டர். அல்லது, பசு நெய் - 1/4 கப்

ஜீனி - 1 கப்

முந்திரி

சக்லேட் - 1

பேக்கிங்சோட - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை :
சாஃப்ட் கேக் ரெசிபி
முட்டையை நன்றாக அடித்து கலக்கி கொண்டு அதில் நெய், உப்பு, சோடாப்பு, ஜீனியையும் போட்டு கலக்கி அதனுடன் ரவை, அரிசி மாவு, போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும் பொங்கி வரும் வரை.

அதை. ஒரு ஓவன் பவுலில். அல்லது [கேக் செய்யும் ஃபானில்] சிறிது நெய் தடவி இதை அதன் மேல் சமமாக ஊற்றி. முந்திரியை நெய்யில் வறுத்தும் அதன் மேல் போடலாம்

இல்லை யெனில் சும்மாவும் அதன் மேல் அலங்கரிப்பது போல் தூவி, ஓவனில் 10 நிமிடம் வைத்தால் போதும். சாஃப்ட் கேக் ரெடி.
வெளியில் எடுத்து இதே போல் பிளேட்டில் வைத்து சூட்டோடு அதன் மேல் சாக்லேட் துருவி போட்டு அப்படியே கட் பண்ணி சாப்பிட்டால், சும்மா பொசு பொசுன்னு சாப்பிடவே அருமையாக அதே சமயம் மணத்துடனும் இருக்கும்.

நேரங்கிடைக்கும் மாலை வேளையில் இது போன்று செய்து சாப்பிடுவதும். சாப்பிடக் கொடுப்பதுமே ஒரு கலை!
Tags: