சுவையான மாங்காய் சட்னி செய்வது எப்படி?





சுவையான மாங்காய் சட்னி செய்வது எப்படி?

0
பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிட மாட்டார்கள். 
சுவையான மாங்காய் சட்னி செய்வது எப்படி?
உங்களுக்கு ஒன்று தெரியுமா? மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 

கோடையில் அதிகப் படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். 

ஆனால் மாங்காயை திண்பதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராகப் பராமரித்து, இப்பிரச்னையைத் தடுக்கும். மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. 
இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். 

பொதுவாக மாங்காய் வைத்து சாம்பார், பச்சடி, ஊறுகாய், மாங்காய் சாதம் போன்றவற்றை அதிக அளவில் செய்து இருப்போம். மாங்காய் வைத்து சுவையான சட்னியை செய்யலாமா ! 

இது நாம் வழக்கமாக செய்யும் சட்னிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். வாருங்கள்! சுவையான மாங்காய் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :

மாங்காய் பெரியது - 1

தேங்காய் துருவல் - 1/2 கப் 

வர மிளகாய் - 7 அல்லது பச்சை மிளகாய் - 7

இஞ்சி - 1 இன்ச் 

வெல்லம் - சிறிது 

பெருங்காய தூள் - 1/4ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள் :

கடுகு - 1/2 ஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு 

கருவேப்பிலை - 1 கொத்து 

செய்முறை:
மாங்காய் சட்னி செய்வது
முதலில் தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மாங்காயை ஒரு முறை அலசி விட்டு, தோல் நீக்கி கொள்ள வேண்டும். பின் தோல் நீக்கிய மாங்காயினை சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் இஞ்சியை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் அரிந்த மாங்காய், துருவி வைத்துள்ள தேங்காய், வர மிளகாய் அல்லது பச்சை மிளகாய், அரிந்து வைத்துள்ள இஞ்சி, வெல்லம் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ் !
இப்போது மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் தெளித்து மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும். எண்ணெய் சூடான பின்பு, கடுகு, உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். 
தாளித்ததை சட்னியில் சேர்த்து விட வேண்டும். அவ்ளோ தான் ! ருசியான மாங்காய் சட்னி ரெடி!

இதனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள். நிச்சயமாக வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இதன் சுவை இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)