உருளைக்கிழங்கு பான்கேக் செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு பான்கேக் செய்வது எப்படி?

0
உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
உருளைக்கிழங்கு பான்கேக் செய்வது
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். 

அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. 

உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. 

இதனை வறுத்து உண்பதை விட வேக வைத்து உண்பதே நல்லது. வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். 
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. 

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 2,

சோள மாவு - 2 டீஸ்பூன்,

முட்டை - 1,

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

இரண்டு உருளைக்கிழங்கை எடுத்து அதில் உள்ள மண் மற்றும் அழுக்கு போக நன்கு அலசி கொள்ளவும். பின்பு அதை தேங்காய் துருவல் போல சிறிது சிறிதாக துருவிக் கொள்ளவும். 

பிறகு இத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, மிளகுத் தூள், மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கி கொள்ளவும். 
பிறகு சிறிது நேரம் அதை ஊற வைத்து அதில் சோள மாவைப் போட்டுக் கலந்து தோசைக் கல்லில் அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)