ஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப் செய்வது எப்படி?





ஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப் செய்வது எப்படி?

0
குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. மேலு வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை  சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. 
ஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப்
அதிகச் சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். 

குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,  சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. 

குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு  ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது. 
பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை  பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
  
என்னென்ன தேவை?

குடைமிளகாய், கேரட், பீன்ஸ் - தலா 1,

கோஸ் - 2 கப்,

காளான் - 1 டேபிள் ஸ்பூன்,

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்,

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்,

வெங்காயத்தாள் - 1 கப்,

ரெட் சில்லி பேஸ்ட்,

சோயா சாஸ், மிளகுத்தூள் - தலா 1 டீஸ்பூன்,

வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு, எண்ணெய், சோள மாவு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
காய்கறிகளை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து இஞ்சி, பூண்டு, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், கோஸ், காளானை போட்டு சிறிது வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 
பிறகு சோயா சாஸ், மிளகுத் தூள், உப்பு, வினிகர், ரெட் சில்லி பேஸ்ட், சோள மாவு சேர்த்து, சிறிது கெட்டியாக வந்ததும் இறக்கி, ஸ்ப்ரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)