புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீ செய்வது எப்படி?





புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீ செய்வது எப்படி?

0
ஹெர்பல் டீ என்று கூறப்படும் மூலிகைத் தேநீர் என்பது தேநீரே அல்ல, தேநீருக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 
புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீ செய்வது எப்படி?
தேயிலை தவிர்த்து வேறு மூலிகை அல்லது தாவரங்களில் இருந்து பெறப்படும் வடிகட்டிய சாறுகளை தான் மூலிகைத் தேநீர் என்று சொல்கிறோம். 

தாவரங்களின் இலைகள், பூக்கள், விதைகள், பழங்கள், பட்டை மற்றும் வேர்கள் போன்ற பாகங்களை கொண்டு வடிசாறு தயாரிக்கப்படும். 

ஒரே ஒரு மூலிகை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூலிகைகள் கொண்டு இந்த மூலிகைத் தேநீரைத் தயாரிக்க முடியும். நம் உடலை ஆரோக்கியமாக பராமரிக்கவும் நோய்களில் இருந்து காத்துக் கொள்ளவும் இந்த ஹெர்பல் டீ உதவி செய்கின்றது. 

இந்த மூலிகைகளில் விட்டமின்கள், ஆண்டி ஆக்சிடெண்ட்கள், உடலுக்கு அவசியமான எண்ணெய்கள், நார்ச்சத்து போன்ற உடல் நலத்துக்கு அவசியமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.

புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீயை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

துளசி – 2 கைபிடி

கிராம்பு – 5

மிளகு – 5

சீரகம்- 1 தேக்கரண்டி

தேன் – தேவைக்கு

செய்முறை :

கிராம்பை பொடி செய்து கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் துளசி, கிராம்பு தூள், மிளகு, சீரகம் கலந்து மீண்டும் நன்றாக கொதிக்க வைக்கவும். 

பின்பு வடிகட்டி எடுத்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து பருகுங்கள். இந்த டீயை 100 மி.லி. அளவில் காலை, மாலை என இருவேளை பருகினால் உடலில் புத்துணர்ச்சி பொங்கும்.

ஹெர்பல் டீயின் நன்மைகள்:

இது உற்சாகத்தை அளிப்பதுடன், நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கும்.  உடலில் நச்சுகளை நீக்கி தூய்மைப்படுத்தி, உடலின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.

மனதுக்கு அமைதியையும் சாந்தத்தையும் அளிக்கிறது. உணவு செரிமான மண்டல செயல்பாடுகளை எளிதாக்கும்.

தூக்கமின்மை பிரச்னையை குறைக்கும். நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)