ருசியான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி?





ருசியான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன்கள் எப்போதுமே நல்லது தான் என்றாலும் விரால் மீனுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த மீனை அசைவ பிரியர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். 
ருசியான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி?
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது. 

மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது. கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. 

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சன்டே சிக்கம், மட்டன் சாப்பிட்டு சலித்து போனவர்கள் விரால் மீன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

விரால் மீன் – 500 கிராம்

சின்ன வெங்காயம் – 250 கிராம்

தக்காளி – 250 கிராம்

தேங்காய்ப்பால் – 2 கப்

பூண்டு – 1

கடுகு – 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

வெந்தயம் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

எண்ணெய் – அளவுக்கு

கொத்த மல்லி – சிறிதளவு
செய்முறை :
மீனை நன்கு கழுவி துண்டுக ளாக வெட்டக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்து பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

 தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் தேங்காய்ப் பாலை விட்டு நன்கு கொதிக்கும் போது மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்த பின் அடுப்பை மிதமான தீயில் 7 நிமிடம் வைத்து கொத்த மல்லித ழை தூவி இறக்கவும். 
எலும்புகள் பலமாக இருக்க என்ன செய்ய வேண்டும் !
சுவையான விரால் மீன் குழம்பு ரெடி.
குறிப்பு:

எப்போதுமே விறால் மீன் வாங்கும் போது முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்க வேண்டும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.
Tags: